தமிழ்நாட்டில் கனமழை.. நாளை மறுநாள் மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக்கடலில் ஒரு நாள் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாகவும், பின்னர் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பல பகுதிகளில் பெய்த கனமழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இதனால், குடியிருப்புப் பகுதிகள், பிரதான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அரசின் துரித நடவடிக்கையில் அடுத்தடுத்த தினங்களில் தண்ணீர் ஓரளவுக்கு வடிந்தது.
இந்நிலையில், ஒரு நாள் முன்கூட்டியே மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு அந்தமான் கடல் பகுதியில், நாளை ஞாயிற்றுக்கிழமை 20ஆம் தேதி உருவாக உள்ள வளிமண்டல சுழற்சியின் காரணமாக வரும் 22ஆம் தேதி மத்திய வங்க கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 21 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கன மழைகான வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வருகின்ற 24 மற்றும் 25ஆம் தேதியும் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், 22 மற்றும் 23 ஆகிய இரண்டு தேதிகளிலும் தமிழ்நாட்டிற்கு கன மழைகான வாய்ப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தவிர, மத்திய அந்தமான் கடல் பகுதியில் உள்ள வளிமண்டல சுழற்சியின் காரணமாக வரும் 21ஆம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?