"மருத்துவ பாடத்திட்டம் தமிழில் வேண்டும்" - அமித்ஷா வலியுறுத்தல்..!
மருத்துவம், பொறியியல் பாடத்திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் தலக்கோலம் பகுதியில் ராஜாதித்ய சோழன் பெயர் சூட்டப்பட்டுள்ள சிஏஎஸ்எப் மண்டல பயிற்சி மையத்தின் ஆண்டு விழா இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசின் மும்மொழிக் கொள்கை எதிர்ப்புக்கு மத்தியில் தக்கோலத்தில் நடைபெற்ற CISF 56வது ஆண்டு விழாவில் அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர், வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து வீரர்களின் சாகச நிகழ்ச்சியை அவர் கண்டுகளித்தார்.
Read More: IND vs NZ: 25 ஆண்டுகால பகையை தீர்க்குமா இந்தியா.. இறுதிப்போட்டியில் யாருக்கு வெற்றி..?
இந்த ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, மத்திய தொழில் பாதுகாப்புப் படை தொடங்கப்பட்டு 56 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது என குறிப்பிட்டார். மோடி வந்த பிறகுதான் தமிழில் தேர்வு எழுத முடிகிறது மேலும் பிரதமர் மோடி தமிழுக்கும் அதன் பாரம்பரியத்திற்கும் முக்கியத்துவம் தருகிறார் என்றும், பிரதமர் மோடி வந்தபிறகே, CISF தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடிவதாகக் கூறினார். ஒவ்வொரு மாநில மொழியின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு பாடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும் மருத்துவம், பொறியியல் படிப்புகளும் மாநில மொழிகளில் படிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
Read More: Sunil Chhetri: மீண்டும் களத்திற்கு திரும்பிய சுனில் சேத்ரி.. மகிழ்ச்சியில் கால்பந்து ரசிகர்கள்..!
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் மோடி தமிழுக்கும் அதன் பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறினார். அதோடு, மருத்துவம், பொறியியல் பாடத்திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தினார். 2 ஆண்டுகளாக இந்த கோரிக்கையை முன்வைத்து வந்தபோதும், தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
What's Your Reaction?






