Sunil Chhetri: மீண்டும் களத்திற்கு திரும்பிய சுனில் சேத்ரி.. மகிழ்ச்சியில் கால்பந்து ரசிகர்கள்..!

Sunil Chhetri Return India Team: இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மீண்டும் சுனில் சேத்ரி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Mar 7, 2025 - 15:07
Mar 7, 2025 - 16:49
 0
Sunil Chhetri: மீண்டும் களத்திற்கு திரும்பிய சுனில் சேத்ரி.. மகிழ்ச்சியில் கால்பந்து ரசிகர்கள்..!
மீண்டும் கால்பந்து அணிக்கு திரும்பிய சுனில் சேத்ரி.. மகிச்சியில் ரசிகர்கள்..!

மீண்டும் சுனில்சேத்ரி

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜாம்பவான் சுனில் சேத்ரி கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஆனால், தற்போது சுனில் சேத்ரி மீண்டும் கால்பந்து போட்டிகளில், பங்கேற்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 40 வயதாகும் சுனில் சேத்ரி கடந்த ஆண்டு சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். வருகிற 19ஆம் தேதி மாலத்தீவிற்கு எதிராக நடைபெறும் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் சுனில் சேத்ரி விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Read More: IND vs NZ: 25 ஆண்டுகால பகையை தீர்க்குமா இந்தியா.. இறுதிப்போட்டியில் யாருக்கு வெற்றி..?

ஆசியக் கோப்பை

மார்ச் மாதத்தில் இந்திய அணி இரு சர்வதேச ஆட்டங்களில் விளையாடுகிறது. மார்ச் 19 ஆம் தேதி மாலத்தீவு அணியுடன் நட்பு ஆட்டத்திலும் மார்ச் 25 ஆம் தேதி 2027ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தகுதி சுற்றில் வங்கதேச அணியுடனும் இந்தியா மோதுகிறது. இந்த இரு ஆட்டங்களுமே ஷில்லாங்கில் நடைபெறுவதால், இந்த இரு போட்டிகளுக்கான 26 பேர் கொண்ட இந்திய அணியில் சுனில் சேத்ரி விளையாட உள்ளார். 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் குவைத் உடனான போட்டிக்கு பிறகு அவர் ஓய்வு பெற்றார். கொல்கத்தா சால்ட்லேக் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் மத்தியில் இருந்து விடை பெற்றார். பின்னர், ஐ.எஸ்.எல் லீக்கில் பெங்களுரு எப்.சி அணிக்கு மட்டும் விளையாடி வந்தார். 

Read More: தமிழக முதலமைச்சர் அப்டேட்டாக இல்லை - தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம்

இந்திய கால்பந்து அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் (151 போட்டிகள்) மற்றும் அதிக கோல்கள் (94 கோல்கள்) பதிவு செய்த வீரராக சுனில் சேத்ரி திகழ்கிறார். 40 வயதான அவர், கடந்த 2005-ல் இந்திய சீனியர் கால்பந்து அணியில் விளையாடத் தொடங்கினார். 

ரசிகர்கள் மகிழ்ச்சி

“எனது ஓய்வு முடிவு உடல் சார்ந்தது அல்ல. நான் இன்னும் ஃபிட்டாக இருக்கிறேன். நன்றாக ஓடுகிறேன், பந்தை சேஸ் செய்கிறேன், டிபென்ட் செய்கிறேன். கடினமாக உழைப்பது எனக்கு சிக்கல் அல்ல. ஓய்வுக்கான காரணம் மன ரீதியானது” என சுனில் சேத்ரி தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, சமூக வலைதளங்களில் சுனில் சேத்ரி மீண்டும் அணிக்கு திரும்பியதை வரவேற்று அவரது ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow