This Week OTT Release: வாழை, போகுமிடம் வெகு தூரமில்லை... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை, விமலின் போகுமிடம் வெகு தூரமில்லை உள்ளிட்ட மேலும் சில படங்கள், வெப் சீரிஸ்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன.

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்த வாழை, மாரி செல்வராஜ்ஜின் பயோபிக் மூவியாக உருவானது. ஆகஸ்ட் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியான வாழை, ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. நேரடியாக ஓடிடியில் வெளியாகவிருந்த வாழை படத்தை, தியேட்டரில் ரிலீஸ் செய்தார் மாரி செல்வராஜ். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது, படத்தின் பட்ஜெட்டை விட பல மடங்கு வசூலித்த வாழை, இந்த வாரம் (அக்.11) ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. திரையரங்குகளில் சூப்பர் ஹிட்டான வாழை படத்துக்கு, ஓடிடி ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழில் விமல் நடித்துள்ள போகுமிடம் வெகு தூரமில்லை திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. மைக்கேல் கே ராஜா இயக்கத்தில் விமல், கருணாஸ், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்த போகுமிடம் வெகு தூரமில்லை, ஆகஸ்ட் 23ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. விமலுக்கு கம்பேக் கொடுக்கும் விதமாக கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம், இந்த வாரம் முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இதுதவிர தமிழில் படிக்காத பக்கங்கள் என்ற திரைப்படம், இந்த வாரம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மலையாளத்தில் லெவல் க்ராஸ் (Level Cross) திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. அர்பாஸ் அயூப் இயக்கத்தில் ஆசிஃப் அலி, அமலா பால், ஷரஃப் யு தீன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் சைக்காலஜி த்ரில்லர் ஜானரில் உருவானது. ஜூலை மாதம் திரையரங்குகளில் ரிலீஸான லெவல் க்ராஸ், இந்த வாரம் முதல் ஆஹா ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. அதேபோல் மலையாளத்தில் ஜெய் மகேந்திரன் என்ற வெப் சீரிஸ், இந்த வாரம் சோனி லிவ் ஓடிடியில் ரிலீஸாகிறது. சைஜு குருப், மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த சீரிஸ், ஓடிடி ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கில் தத்வா (Tatva), பைலம் பிலகா (Pailam Pilaga) ஆகிய படங்கள் Etv வின் ஓடிடி தளத்தில் வெளியாகின்றன. மேலும், மத்து வடலர 2 (Mathu Vadalara 2) நெட்பிளிக்ஸ் தளத்திலும், கோர் புராணம் (Gorre Puranam) ஆஹா ஓடிடி தளத்திலும் வெளியாகின்றன. அதேபோல் இந்தியில் ஜான் ஆபிரஹாம், ஷர்வாரி உள்ளிட்ட பலர் நடித்த வேதா திரைப்படம், ஜீ5 ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் அக்ஷய் குமார், ராதிகா மதன் உள்ளிட்ட பலர் நடித்த சர்ஃபிரா (Sarfira) திரைப்படமும் இந்த வாரம் முதல் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. சூரரைப் போற்று படத்தின் இந்தி வெர்ஷனான இது, ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அதேபோல், அக்ஷய் குமார் நடித்த கேல் கேல் மெய்ன் (Khel Khel Mein) திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்திலும், ஜிந்தகிநாமா (Zindaginama) என்ற வெப் சீரிஸ் சோனி தளத்திலும் வெளியாகின்றன. மேலும் Gutar Gu வெப் சீரிஸ்ஸின் சீசன் 2 அமேசான் ப்ரைம் தளத்திலும், ரீட்டா சன்யால் (Reeta Sanyal) என்ற சீரிஸ் ஹாட்ஸ்டாரிலும் வெளியாகின்றன. மேலும், ராத் ஜவான் ஹை (Raat Jawan Hai) சோனி லிவ் தளத்திலும் ஸ்ட்ரீமிங் ஆகின்றன.
ஹாலிவுட் ரசிகர்களுக்கு, லோன்லி ப்ளானட் (Lonely Plannet), In Her Place என்ற ஸ்பானிஷ் மூவி ஆகியவை நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகின்றன. அதேபோல், Tea Cup என்ற வெப் சீரிஸ் ஜியோ சினிமா ஓடிடியிலும், Uprising என்ற கொரியன் மூவி, Temurun என்ற தாய்லாந்து மூவி இரண்டும் நெட்பிளிக்ஸிலும் ஸ்ட்ரீமிங் ஆகின்றன.
What's Your Reaction?






