Vettaiyan: ரஜினியின் வேட்டையன் ரிலீஸ்... ரகசியமாக தியேட்டர் வந்த விஜய்... இங்கேயும் அரசியலா..?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தசெ ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன் படத்தை, தளபதி விஜய் ரகசியமாக பார்த்துச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

Oct 10, 2024 - 20:51
 0
Vettaiyan: ரஜினியின் வேட்டையன் ரிலீஸ்... ரகசியமாக தியேட்டர் வந்த விஜய்... இங்கேயும் அரசியலா..?
வேட்டையன் படம் பார்த்த விஜய்

சென்னை: ஜெயிலர், லால் சலாம் வரிசையில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று வெளியானது. தசெ ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் என மல்டி-ஸ்டார்ஸ் மூவியாக உருவாகியுள்ள வேட்டையன், மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. கங்குவா படமும் இன்று ரிலீஸாகவிருந்த நிலையில், வேட்டையனுக்காக அதனை ஒத்தி வைத்தார் சூர்யா. இதனால் சிங்கிளாக ரிலீஸாகியுள்ள வேட்டையன் படம் பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது. இதனையடுத்து வேட்டையன் சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து படக்குழுவினர் படம் பார்த்து ரசித்தனர். இயக்குநர் தசெ ஞானவேல், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் தனித்தனியாக ரோகிணி தியேட்டர் வந்தனர். அதேபோல், நடிகர் தனுஷும் ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் வேட்டையன் படம் பார்த்து ரசித்தார். முக்கியமாக ரஜினியின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகியோரும் அதே ரோகிணி தியேட்டரில் வேட்டையன் படம் பார்த்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், தளபதி விஜய்யும் வேட்டையன் படம் பார்க்க ரகசியமாக தியேட்டர் சென்றுள்ளார். ரஜினி வரிசையில் கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்படுவது விஜய் தான். இப்போது ரஜினியை விட அதிகம் சம்பளம் வாங்கும் விஜய், இனிமேல் அரசியலில் களமிறங்கவுள்ளார். முன்னதாக ரஜினியும் அரசியலுக்கு வருவேன் என சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் தனது முடிவில் இருந்து பின்வாங்கினார். அதேபோல், இப்போது ரஜினி சூப்பர் ஸ்டார் என்றால், அவருக்குப் பின்னர் அடுத்த யார் சூப்பர் ஸ்டார் என்ற பஞ்சாயத்தும் சில வருடங்களாக ட்ரெண்டிங்கில் இருந்தது.

இதில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சிலர் கொளுத்திப் போட, அதன்பின்னர் ரஜினியும் விஜய்யும் மாறி மாறி குட்டி ஸ்டோரி சொல்லி ரசிகர்களை உசுப்பேற்றி வந்தனர். இறுதியாக சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு விஜய்யே ஒரு முடிவு கட்டினார். அதேபோல் ஒரே சூப்பர் ஸ்டார் அது ரஜினி மட்டும் தான் எனக் கூறியதோடு, நான் என்றைக்குமே தலைவரின் ரசிகன் தான் என பேசியிருந்தார். இந்நிலையில் ரஜினியின் வேட்டையன் படத்தை விஜய் ரகசியமாக தியேட்டரில் சென்று பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை தேவி தியேட்டரில் மாஸ்க் அணிந்துகொண்டு வேட்டையன் படம் பார்த்த விஜய், ரசிகர்களுக்கே தெரியாமல் காரில் ஏறிச் சென்றுள்ளார். அதுவரையில் விஜய் ரசிகர்களுடன் படம் பார்த்தது யாருக்குமே தெரியாது என சொல்லப்படுகிறது. வேட்டையன் ரிலீஸான முதல் நாளில் முதல் காட்சியை விஜய் தியேட்டர் சென்று பார்த்தது அவரது அரசியல் லாபத்துக்காக என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள விஜய், இனி வாக்குகளை பிரிப்பதில் தான் கவனம் செலுத்துவார். அப்படித்தான் தற்போது வேட்டையன் படம் பார்த்தால், அவருக்கு ரஜினி ரசிகர்களிடம் மரியாதை வரும். அதுவே தேர்தலில் வாக்காக மாறும் என விஜய் திட்டம் போடுகிறார் என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow