மகாளயா அமாவாசை... கோயில்களில் குவியும் பொதுமக்கள்!

புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் மகாளயா அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பொதுமக்கள் தங்களது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

Oct 2, 2024 - 13:58
 0
மகாளயா அமாவாசை... கோயில்களில் குவியும் பொதுமக்கள்!
மகாளயா அமாவாசை... கோயில்களில் குவியும் பொதுமக்கள்

அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால் மகாளய அமாவாசை தினத்தன்று தாய் வழி முன்னோர்கள், தந்தை வழி முன்னோர்கள், மற்றும் பங்காளிகள் ஆகியோருக்கும் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு அம்சமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மாகாளய அமாவாசை ஆகிய தினங்களில் வாழ்ந்து மறைந்து இறந்து போன தங்களது முன்னோர் நினைவாக புனித நீர்நிலைகளில் புனித நீராடி திதி கொடுத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். 

இந்த நிலையில் கரூர் மாவட்டம்  மாயனூர் காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் புனித நீராடிய பின்னர் வாழை இலையில் பழம், வெற்றிலை பாக்கு, எள்ளு, அரிசி ஆகியவற்றை கொண்டு ஏராளமானோர் வரிசையாக அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி, அரிசி, காய்கறி, கீரை. உள்ளிட்ட பொருட்களை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி மறைந்த தங்கள் முன்னோர்களை நினைத்து எள் தண்ணீரை காவிரி ஆற்றில் விட்டு சூரிய பகவானுக்கு தீபம் காட்டி வழிப்பட்டு தங்கள் கடமையை நிறைவேற்றினர். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் தர்ப்பணம் செய்தனர். 

திருவண்ணாமலை ஐய்யங்குளக்கரையில் மஹாளய அமாவாசை முன்னிட்டு இன்று  ஆயிரக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பாடு செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் மஹாளிய அமாவாசை ஒட்டி காலை முதலே பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மகாலயா அமாவாசைய முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயிலில் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: இன்று நடைபெறும் மது ஒழிப்பு மகளிர் மாநாடு... 2 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூரில் கெற்றாலீஸ்வரர் கோயிலில் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு புரோகிதர்கள் மூலம் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இந்நாளில் முன்னோர்களை வழிபட்டு தர்ப்பணம் செய்தால்  தன்னுடைய தலைமுறைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும் என்று ஐதீகம் உண்டு எனவே புரோகிதர்கள் மூலம் பிண்டம் வைத்து எல் போன்ற தானியங்களை தர்ப்பணமாக கொடுத்து ஏராளமானோர் வழிபட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow