போலீஸாரை வாழ்த்திய மஹா விஷ்ணு.. சித்தர்கள் சொன்னதால் செய்ததாக வாக்குமூலம்

இரவு உணவு வாங்கிக் கொடுத்த போலீசாரை வாழ்த்திய மஹா விஷ்ணு, சித்தர்கள் கூறியதாலேயே விநாயகர் சதுர்த்தி என்று தெரிந்தும் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Sep 8, 2024 - 16:27
Sep 9, 2024 - 10:56
 0
போலீஸாரை வாழ்த்திய மஹா விஷ்ணு.. சித்தர்கள் சொன்னதால் செய்ததாக வாக்குமூலம்
சித்தர்கள் கூறியதாலேயே போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வந்தேன் - மஹா விஷ்ணு வாக்குமூலம்

சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் ஓரிரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்ஜென்மம் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார் மகா விஷ்ணு என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அப்போது, முன் ஜென்மத்தில் தவறுகள், பாவங்கள் செய்ததால் தான் இப்போது மாற்றுத் திறனாளிகளாகவும் ஏழைகளாகவும் இருக்கிறார்கள் என பேசியிருந்தார்.

அப்போது அதே பள்ளியில் வேலை பார்த்து வரும் மாற்றுத்திறனாளி ஆசிரியரான சங்கர், மகா விஷ்ணுவின் கருத்து தவறு என எதிர்ப்புத் தெரிவித்தார். அதனையடுத்து மகா விஷ்ணுவுக்கும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மகா விஷ்ணுவின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பொதுமக்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளி விஜயராஜ் என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மகாவிஷ்ணு நேற்று விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு  கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மகா விஷ்ணுவிற்கு 20.09.2024 வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்களை தெரிவித்துள்ளார். 10ஆம் வகுப்பு வரை படித்துள்ள நிலையில், சித்தர்கள் ஆசீர்வாதத்தால் சொற்பொழிவுகள் வழங்கும் தனது தனது யூடியூப் சேனலை, 5 லட்சம் ஃபாலோவர்கள் பின் தொடர்வதாகவும், பரம்பொருள் பவுண்டேஷன் மூலமாக பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாகவும், 5 நாடுகளில் இதுபோன்ற சொற்பொழிவு ஆற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

எனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், மாணவ மாணவிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் பேசியதாகவும், இது போன்று பல இடங்களில் தான் பேசி இருப்பதாகவும் மகா விஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் சித்தர்கள் என்னிடம் பேசுவார்கள், சித்தர் சொன்னதை தான் பேசியதாகவும், என்னை சித்தர்கள் தான் வழி நடத்துவதாகவும், சித்தர்கள் கூறியதாலேயே விநாயகர் சதுர்த்தி என்று தெரிந்தும் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தவிர, பள்ளியில் மாற்றுதிறனாளிகள் பற்றிதான் பேசியதாகவும், தவறாக ஏதும் பேசவில்லை எனவும், தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக நீதிபதியிடமும் மகா விஷ்ணு வாக்குமூலம் தெரிவுத்துள்ளார். மேலும் மஹாவிஷ்ணுவை விமான நிலையத்தில் இருந்து போலீசார் அழைத்து சென்ற பின் போலீஸ் வாகனத்தில் வைத்தே அவரை பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளனர்.

வாகனத்தில் வைத்தே அவரிடம் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது. இரவு உணவை போலீசார் விஷ்ணுக்கு வாங்கி கொடுத்தபோது, தானும் தினந்தோறும் பலருக்கு உணவு வழங்குவதாகவும், உணவு வாங்கி கொடுத்த உங்களை கடவுள் ஆசிர்வாதிப்பார் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், மாற்றுதிறனாளிகள் குறித்த பேச்சுக்கு அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow