நிர்வாண வீடியோ.. மிரட்டல்.. இன்ஸ்டாவால் லட்சக்கணக்கில் பணம் இழந்த மாணவி
இன்ஸ்டா மூலம் பழகி மாணவியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் 3 ஆண்டு படித்து வருகிறார். விடுமுறை நாட்களில் மாணவி சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து தங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த மாணவி சென்னை வந்து உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த சுஜீத் என்பவர் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. தன்னை காதலிப்பதாக கூறி வந்ததாக தெரிகிறது.
மேலும் வீடியோ காலில் நிர்வாணமாக வர வேண்டும் இல்லை என்றால் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொள்வதாக மாணவியை மிரட்டியதாக தெரிகிறது. பயந்துபோன மாணவி அதுபோல செய்துள்ளார். அப்போது சுஜீத் அதனை போட்டோ எடுத்து வைத்து கொண்டுள்ளார். பிறகு ஆபாச படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு பணம் கேட்டு மாணவியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
மாணவியும் ரூ.5 லட்சம் பணமும், தங்க நகைகளையும் கொடுத்துள்ளார். பலமுறை இது போல மிரட்டி சுஜீத் வாங்கி உள்ளார். இந்த நிலையில் நேற்று மீண்டும் ரூ. 50 ஆயிரம் கேட்டு மாணவியை அவர் மிரட்டியதாக தெரிகிறது.
தனது வங்கி கணக்கில் செலுத்தவில்லை என்றால் மீதமுள்ள ஆபாச போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து விடுவேன் மிரட்டி உள்ளார். பயந்துபோன மாணவி இது குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் குறித்து 5 பிரிவுகளின் கீழ் சுஜீத் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுஜீத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
What's Your Reaction?