Netanyahu Drone Attack: அசுர வேகத்தில் நுழைந்த ட்ரோன்... மரண பயத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு மரண பயத்தை காட்டு விதமாக, அவரது இல்லம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது லெபனான்.
டெல் அவில்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவின் ஹமாஸ் படைத் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர் போரை விட்டுவிட்டு தங்கள் நாட்டு பிணயக் கைதிகளை ஒப்படைக்க வேண்டும் என இஸ்ரேல் கூறியிருந்தது. அதேபோல், போரை நிறுத்த ஹமாஸ் அமைப்பினரும் சில நிபந்தனைகளை விதித்திருந்தனர். இதனால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு மரண பயத்தை காட்டு விதமாக, அவரது இல்லம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது லெபனான்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் செயல்படும் ஹமாஸ் அமைப்புக்கும் - இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில், ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவும் கொலை செய்யப்பட்டார். கடந்த ஜூன் மாதம் ஈரானின் புதிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்றிருந்தார் இஸ்மாயில் ஹனியே. அப்போது ஈரான் தலைநகர் டெக்ரானில் வைத்து இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீட்டின் மீது வான்வெளி தாக்குதல் நடத்தி அவரை கொலை செய்தது இஸ்ரேல்.
இதனால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் மிகவும் உக்கிரமானது. காஸாவுக்கு ஆதரவாக லெபனான், ஈரான் நடுகள் களத்தில் இறங்க, இஸ்ரேல் மீதான தாக்குதலும் தீவிரமானது. இந்நிலையில், ஹிஸ்புல்லாவின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா சில வாரங்களுக்கு முன் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்க ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது கடந்த 1ம் தேதி ஏவுகனை தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஹமாஸ் படைத் தலைவர் யஹ்யா சின்வார் தங்கியிருந்த கட்டடம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இருதினங்களுக்கு முன் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் யஹ்யா சின்வார் உயிரிழந்தார்.
உயிரிழக்கும் முன்னர் தன் கையில் வைத்திருந்த ஹேண்ட் ஸ்டிக்கை, அங்கு பறந்து வந்த இஸ்ரேலின் ட்ரோன் மீது தூக்கி வீசினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை குறி வைத்து, ஹமாஸ் அமைப்பினரும், லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா உட்பட ஈரான் நாடும் திட்டமிட்டுள்ளன. இதனையடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சி நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் தெற்கு ஹைஃபா பகுதியில் உள்ள சிசேரியா என்ற இடத்தில், நெதன்யாகுவுக்கு சொகுசு பங்களா உள்ளது. இந்த பங்களாவை நோக்கி லெபனானில் இருந்து பறந்து வந்த ட்ரோன், அதன் அருகே வெடித்து சிதறியுள்ளது. இதில் பங்களாவின் ஒரு பகுதி முழுவதுமாக சேதமடைந்துள்ளதாக இஸ்ரேல், சவூதி அரேபியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேநேரம் இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. ட்ரோன் தாக்குதல் நடந்த நேரத்தில் நெதன்யாகு வீட்டில் இருந்தாரா? இல்லையா? என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. இந்த ட்ரோன் தாக்குதலை எதிர்பார்க்காத இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதற்றத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் நெதன்யாகுவை டார்க்கெட் செய்து தாக்குதல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நெதன்யாவின் பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டுள்ளது. ஹமாஸ் படைத் தலைவர் யாஹ்யா சின்வார் உயிரிழப்புக்கு பதிலடியாக, நெதன்யாகு வீட்டின் மீது ட்ரோன் அட்டாக் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?