Apple Watch Series 10 : புதிய அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட் வாட்ச்சுகளை களமிறக்குகிறக்குகிறது ஆப்பிள்!

உலக சந்தையில் புதிய Apple Watch Series 10-ஐ ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Aug 20, 2024 - 19:12
Aug 21, 2024 - 10:15
 0
Apple Watch Series 10 : புதிய அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட் வாட்ச்சுகளை களமிறக்குகிறக்குகிறது ஆப்பிள்!
Apple Watch Series 10

இந்தியாவில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் மீதான மோகம் தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆப்பிள் மொபைல்கள் மற்றும் வாட்ச்-களில் உள்ள டெக்னாலஜியைத் தாண்டி வெறும் கவுரவத்திற்காகவே இந்த IPhone, iwatch வாங்கும் கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த மோகம் தற்போதைய இளம் தலைமுறையினரிடையே அதிகரித்துக் காணப்படுகிறது. கண்ணாடி முன்பு நின்று IPhone வைத்திருக்கிறோம் என்று காட்டிக்கொள்வதற்காகவே செல்ஃபி எடுப்பது மற்றும் Mobile Case போட்டால் ஆப்பிள் லோகோ தெரியாமல் போய்விடுமோ என்று Mobile Back Case கூட போடாமல் சுற்றிக்கொண்டிருக்கும் நபர்கள் ஏராளம். 

இப்படி இருக்கும் சூழலில் நடப்பாண்டிற்கான புதிய மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Iphone 15 மற்றும் Iphone 15 Pro Max ஆகிய மாடல்கள் சந்தைகளில் அடிபுடியாக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் புதிய மாடல்களான iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, and iPhone 16 Pro Max ஆகியவை உலக சந்தைகளில் அறிமுகமாகவுள்ளது. 

நீண்ட நாட்களாகக் கூறப்பட்ட ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் அம்சம் இந்த மாடல் போன்களில் அறிமுகமாகவுள்ளது. சக்திவாய்ந்த, ஒருங்கிணைந்த, உள்ளுணர்வு கொண்ட, தனிப்பட்ட மற்றும் தனியுரிமை என ஐந்து மிக முக்கிய விஷயங்களை அடிப்படையாக கொண்டு ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த சேவையின் கீழ் தரவுகளை எழுதுவது, பல்வேறு செயலிகளில் தரவுகளை மறு உருவாக்கம் செய்வது போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. 

இதுகூடவே Apple Watch Series 10-ம் அடுத்த மாதம் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெறவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Apple Watch Series 10 அம்சங்கள்: 

பெரிய டிஸ்பிளே

Apple Watch Series 10-ன் சிறிய மாடலின் டிஸ்பிளே 41மிமீட்டராக இருந்த நிலையில் தற்போது 45 மிமீட்டராக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல பெரிய மாடலின் டிஸ்பிளே 45 மிமீட்டராக இருந்த நிலையில் தற்போது வரவுள்ள புதிய மாடலில் 49 மிமீட்டராக அதிகரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேம்படுத்தப்பட்ட செயல்திறனுக்காக புதிய சிப்

Apple Watch Series 10-ல் S10 என்ற பெயரில் புதிய சிப்பை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்க்கப்படும் சிப்பில் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு செயலாக்க திறன்களுக்கான நியூரல் எஞ்சின் (நியூரல் பிராசசிங் யூனிட்) இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க: 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

புதிய ஆரோக்கிய கண்காணிப்பு அம்சம்

உயர் இரத்த அழுத்தம் கண்டறிதல் மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் கண்டறிதல் போன்ற புதிய ஆரோக்கிய கண்காணிப்பு அம்சங்களை ஆப்பிள் வாட்சிற்காக ஆப்பிள் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சங்கள் Apple Watch Series 10-ல் கொண்டுவரப்பட்டால், ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் செல்வாக்கு மேலும் உயர வாய்ப்புகள் உள்ளன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow