சோகத்தில் லேடி சூப்பர் ஸ்டார்.. சரிந்த மார்க்கெட் சம்பளம் இவ்வளவு தானா?

மலையாள திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ள நடிகை நயன்தாராவின் சம்பள விவரம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்திய நடிகைகளிலேயே நான் தான் டாப்பு என மார்த்தட்டிக்கொண்டிருந்த நடிகை நயன்தாராவுக்கு ஏற்பட்டுள்ள நிலையை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

Feb 14, 2025 - 17:33
Feb 14, 2025 - 17:33
 0
சோகத்தில் லேடி சூப்பர் ஸ்டார்.. சரிந்த மார்க்கெட் சம்பளம் இவ்வளவு தானா?
சோகத்தில் லேடி சூப்பர்ஸ்டார்.. சரிந்த மார்க்கெட் சம்பளம் இவ்வளவு தானா?

இந்திய நடிகைகளிலேயே நான் தான் டாப்பு என மார்த்தட்டிக்கொண்டிருந்த நடிகை தான் நயன்தாரா. சமீபத்தில் கூட லேடி சூப்பர் ஸ்டார் என்ற name cardஐ நான் போடச்சொல்லி நான் கேட்பதில்லை அவர்களாகவே தான் போடுகிறார்கள் என தன்னுடைய தன்னடக்கத்தை வேறு மாதிரியாக வெளிக்காட்டினார் நயன்தாரா. 

அப்போதில் இருந்து தொடங்கி, ரசிகர்களுக்கு handshake கூட கொடுக்க மறுத்தது, தனுஷிடம் சண்டையிட்டது, தன்னுடைய பிராண்டின் நிகழ்வில், lateஏ பொறாமைப்படும் அளவிற்கு Lateஆக வந்து யூடியூபர்களை காக்க வைத்தது, அவங்களாம் நம்மள மாதிரி normal people இல்ல என்ற ட்ரோலுக்கு உள்ளாகியது என, நயன் திரும்பிய இடமெல்லாம் சர்ச்சையில் சிக்கிவருகிறார். 

நயன் மற்றும் விக்கியின் நடவடிக்கைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளம்பியுள்ளது. இந்நிலையில் தமிழ் திரயுலகில் 20 வருடங்களாக இருக்கும் நயன் வருடத்திற்கு இரண்டு படங்கள், மூன்று படங்கள் என பிசியாக இருந்தது கடந்த 2023ம் ஆண்டோடு முடிந்துவிட்டது. 

கடந்த 2024ம் ஆண்டில் ஒரு படத்தில் கூட அவர் நடிக்கைவில்லை. இதனால் நயனின் ஆக்டிங் கரியர் அதல பாதாளத்துக்கு போய்விட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன....

இந்தநிலையில் தான் மலையாள சூப்பர் ஸ்டார் படத்தில் சமீபத்தில் கமிட் ஆனார் நயன் தாரா...

சி யூ சூன், மாலிக் ஆகிய மலையாள படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் அடுத்து இயக்கும் படத்தில் மம்மூட்டி, மோகன்லால் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் தான் நடிகை நயன்தாரா கமிட் ஆகி இருக்கிறார். இதற்காக நயன்தாராவை வரவேற்கும் விதமான வீடியோ ஒன்றும் வெளியானது. 

இந்த நிலையில் தான், அப்படத்துக்காக நடிகை நயன்தாராவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சம்பளம் வெறும் 20 லட்சம் மட்டும்தான் என மல்லு வட்டாரத்தில் பேசப்படுகிறது. மலையாள திரையுலகில் பொதுவாக சம்பளம் குறைவாக தான் வழங்கப்படும் என்பது ஒருபுறம் இருந்தாலும், கடந்த ஆண்டில் ஒரு படத்தில் கூட அமிட் ஆகாத நயன் இந்த மலையாள படம் கிடைத்த உடன் தடாலடியாக ஒரு தொகையை கூறியதாகவும் அதற்கு தயாரிப்பாளர் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு, வேறு வழியில்லாமல் நயன் இந்த 20 லட்சத்திற்கு ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த தமிழ் சினிமா ரசிகர்கள் லேடி சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow