'பயப்படாம சொல்லுங்க பார்ப்போம்' - கிரிக்கெட் தேர்வுக்குழுவை விளாசிய ஸ்ரீகாந்த்
Srikanth Slams Gautham Gambhir : உடற்தகுதி காரணமாக ஹர்திக் பாண்டியாவை(Hardik Pandya) கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதாக, தேர்வுக்குழுவினர் தெரிவித்ததற்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.

Krishnamachari Srikkanth about Gautam Gambhir : இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் (Rahul Dravid) முடிவடைந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் நிறைவுபெற்றது. ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய வீரர்களும், ராகுல் டிராவிட்டின் கைகளில் கோப்பையை வென்று கொடுத்து அவருக்கு பிரியா விடை கொடுத்தனர்.
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணி தேர்வில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.
அதாவது சூப்பர் பார்மில் உள்ள ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் நீக்கப்பட்டனர். குறிப்பாக, ரோகித் சர்மா ஓய்வால் இலங்கை தொடருக்கு இந்திய அணியின் அடுத்த கேப்டனாக, டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக பணியாற்றிய ஹர்திக் பாண்டியா களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பிட்னஸ் காரணத்தைக் கூறி இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக சூர்யகுமாரும், துணைக் கேப்டனாக சப்மன் கில்லும் நியமிக்கப்பட்டனர்.
2 ஆண்டுகள் அனைத்து டி20 போட்டியிலும் விளையாடும் வகையிலான வீரருக்கு கேப்டன்சி கொடுக்க வேண்டும் என கம்பீர் தேர்வுக்குழுவினரிடம் கூறியதால், ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து, ஹர்திக் பாண்டியாவைவிற்கு ஆதரவாகவும், கம்பீருக்கு எதிராகவும் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்தனர்.
பின்னர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவரும் செய்தியாளர் சந்தித்தனர். இது குறித்து கூறியபோது, “ஹர்திக் பாண்டியா மிகவும் முக்கியமான வீரர், ஆனால் உடற்தகுதி என்பது அவருக்கு சவாலாகவே இருந்து வருகிறது. டி20 வடிவத்தை பொறுத்தவரையில் யாராவது எப்போதும் உடனிருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்" என தெரிவித்தனர்.
இந்நிலையில், தேர்வுக்குழுவினரின் இந்த முடிவை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து கூறியுள்ள ஸ்ரீகாந்த், “அவர்கள் ஓய்வறையில் இருந்து வெளியாகும் கருத்துகளுக்கு சென்றுவிட்டார்கள் என்று நினைக்கிறேன். இந்த எண்ணம் அநேகமாக ஐபிஎல்-இல் இருந்து வந்திருக்க வேண்டும். உடற்தகுதியால் ஹர்திக் பாண்டியாவை எடுக்கவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஐபிஎல் தொடர் முழுவதுமே ஹர்திக் பாண்டியா சிறப்பாகவே விளையாடினார். அதே சமயம் நன்றாக பந்துவீசவும் செய்தார். ஒருவேளை சிறப்பாக முடிக்காமல் இருந்திருக்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணி காலிறுதிக்கு முன்னேறவில்லை. அதே சமயம் டி20 உலகக்கோப்பையில் அவர் துணைக்கேப்டனாக செயல்பட்டதோடு, தொடர் முழுவதுமே சிறப்பாகவே விளையாடினார். ஆகையால், உடற்தகுதி ஒரு பிரச்சனை என்பதை நான் ஏற்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “சூர்யகுமாரும் (Suryakumar Yadav) அற்புதமான வீரர் தான். ஆனால், அவர்கள் விஷயத்தை நேரடியாக கூறி இருக்க வேண்டும். நாங்கள் அணியை முன்னேற்ற வேண்டியிருப்பதால், ஹர்திக் பாண்டியாவை விலக்கிவைக்கிறோம்; நீண்டகால கேப்டன் தேவை என்பதால் சூர்யகுமார் யாதவை நியமித்திருக்கிறோம் என்றும் தெளிவாக தெரிவித்து இருக்க வேண்டும். தைரியமாக சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






