Olympics Food Menu: பட்டர் சிக்கன் முதல் பிரியாணி வரை.. வீரர்களுக்கான உணவு பட்டியல் இதோ!

Paris Olympics Food Menu 2024 : பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்தில் 46,000 சதுர அடி பரப்பளவில் மிகப்பெரிய உணவுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. உணவு கூடத்தில் காபி, டீ, குளிர்பானங்களுக்கு என தனியாக ஸ்டால்களும், மற்ற உணவு வகைகளுக்கு தனித்தனியாக ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளன

Jul 25, 2024 - 15:29
Jul 26, 2024 - 10:01
 0
Olympics Food Menu: பட்டர் சிக்கன் முதல் பிரியாணி வரை.. வீரர்களுக்கான உணவு பட்டியல் இதோ!
Olympics Food Menu

Paris Olympics Food Menu 2024 : உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'பாரீஸ் ஒலிம்பிக் 2024' போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நாளை (26ம் தேதி) கோலாகலமாக தொடங்குகிறது. ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்கும் இந்த விளையாட்டு திருவிழாவில் மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

பாரீஸில் உள்ள 35 இடங்களில் மொத்தம் 32 விளையாட்டு பிரிவுகளில் 206 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கோதாவில் களமிறங்க உள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவில் இருந்து மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த முறை நமது வீரர்கள் பதக்கங்களை வேட்டையாடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஒலிம்பிக்கில் வீரர்கள் சிறப்பாக விளையாடி பதங்கங்களை வெல்வதற்கு மன வலிமையும் மட்டுமின்றி உடல் வலிமையும் இருப்பது அவசியம். இதற்காக ஒலிம்பிக் வீரர்கள் போதிய சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டால்தான் களத்தில் ஜொலிக்க முடியும். இதனால் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு விதவிதமான உணவுகள் (food menu) பரிமாறப்பட உள்ளன.

இதற்காக பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்தில் 46,000 சதுர அடி பரப்பளவில் மிகப்பெரிய உணவுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. உணவு கூடத்தில் காபி, டீ, குளிர்பானங்களுக்கு என தனியாக ஸ்டால்களும், மற்ற உணவு வகைகளுக்கு தனித்தனியாக ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிய உணவு வகைககள், இத்தாலி உணவு வகைகள் என்பது உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உணவு வகைகள் மெனுவில் இடம்பெற உள்ளன.

இதில் 70% வழக்கமான உணவு வகைகளும், 30% இயற்கை முறையிலான ஆர்கானிக் உணவு வகைகளும் இருக்கும். சுமார் 20,000 டன் காபி, 50,000 டீ பேக்குகள் தயாராக உள்ளன. ஒவ்வொரு நாடுகளின் வீரர்களுக்காவும் பிரத்யேகமான உணவுகள் தயாரிக்கப்பட உள்ளன. இந்திய வீரர்களுக்காக பட்டர் சிக்கன் (butter chicken) முதல் வெஜ் பிரியாணி (veg biryani) வரையும் மற்றும் காலிஃபிளவர் கறி (cauliflower curry) பன்னிர் டிஷ் (paneer dishes) வகைகள் இடம்பெற உள்ளன.

கென்ய வீரர்களுக்காக உகாலி உணவுகள் (ugali food), அயர்லாந்து வீரர்களுக்காக ஓட்ஸ் கஞ்சி (oats porridge), அமெரிக்க வீரர்களுக்காக peanut butter உணவு வகைகள் மெனுவில் இடம்பெற உள்ளன. மேலும்  Dairy-free muesli, Chakchouka, வேகவைத்த முட்டை குரோசண்ட் (Poached egg croissant), குளிர்ந்த சூப்கள் (Chilled soups), அல்மாடோ பாணி பிரட் சாலட் (Almado-style bread salad), மினி டாஃபினே ரவியோலி (Mini Dauphiné ravioli), ஃபலாஃபெல் (Falafel), பவுலட் சாஸில் கினி கோழி (Guinea fowl in poulette sauce) உள்ளிட்ட விதவிதமான உணவு வகைகளை வீரர்கள் ருசிக்கலாம்.

மேலும் வெஜி போர்குய்னான் (Veggie bourguignon), Lamb or veggie moussaka, Za'atar sweet potato (ஜாதார் இனிப்பு உருளைக்கிழங்கு), காலிஃபிளவர் ஆல்ஃபிரடோ (Cauliflower Alfredo), கோடை சிட்ரஸ் சாலட் (Summer citrus salad) உள்ளிட்ட ஏராளமான உணவு வகைகளும் வீரர்களுக்கான மெனுவில் உள்ளன. இந்த உணவு வகைகளை பிரான்ஸின் பிரபலமான சமையல் கலைஞர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 20 பிரபலமான சமையல் கலைஞர்கள் தயாரிக்க உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow