Sivaraman Death : கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகள் பாலியல் வழக்கு..ஹைகோர்ட் நீதிபதிகள் சொன்னதென்ன?

Sivaraman Death : கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாமில் 17 மாணவிகள் பாலியல் தொல்லை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவராமன் உயிரிழந்துள்ள நிலையில், வழக்கு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Aug 23, 2024 - 14:37
Aug 24, 2024 - 10:03
 0

Sivaraman Death : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திக்குப்பத்தில் தனியார் பள்ளியில் போலியாக NCC முகாம் நடத்தி 13 மாணவிகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததுடன், 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலி NCC பயிற்சியாளர் சிவராமன் மீது புகார் அளிக்கப்பட்டது. 

இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியபோது தப்ப முயன்ற சிவராமனுக்கு கால் முறிவு ஏற்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே கைது செய்வதற்கு முன்னதாக சிவராமன் விஷம் சாப்பிட்டது ரத்த பரிசோதனை மூலம் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தகவல் நேற்று வெளியாகிய நிலையில், இன்று சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னதாக அவரது தந்தை அசோக்குமார் நேற்று இரவு காவேரிபட்டினம் அருகே கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் அவர் மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் சூரிய பிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் முறையிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow