”அண்ணா நீ வா நா.. வா நா”.. அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி? அக்.31ம் தேதி என்னனு தெரிஞ்சுரும்!
ஐ.பி.எல் போட்டியில் தோனி விளையாடுவது குறித்து இம்மாத இறுதிக்குள் தெரியவரும் என சி.எஸ்.கே அணியின் ceo காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் போட்டியில் தோனி விளையாடுவது குறித்து இம்மாத இறுதிக்குள் தெரியவரும் என சி.எஸ்.கே அணியின் ceo காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் மட்டுமல்லாது, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் தொடர்களில் ஒன்றான, ஐபிஎல்-இலும் மகேந்திர சிங் தோனி பல சாதனைகளை புரிந்துள்ளார். ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேட்பனாக தொடர்ந்து நீடித்துவரும் தோனி, 2010, 2011, 2014, 2018, 2021 மற்றும் 2023 என 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடர் முழுவதும், தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டு அணியை வழிநடத்தினார். பிளே ஆஃப் சுற்றோடு சி.எஸ்.கே. வெளியேறினாலும் தோனியின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் அதிகளவில் மைதானத்தில் குவிந்தனர். சென்னை மட்டுமல்லாது, கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு என எந்த மைதானமாக இருந்தாலும் மஞ்சள் ஜெர்சியே கோலோச்சியது.
2024 சீசனில் இம்பேக்ட் வீரராக தோனி களமிறங்கினாலும், அவருக்கு கோப்பையுடன் பிரியா விடை கொடுக்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சினாலும் அடுத்த சீசனில் பார்த்துக் கொள்ளலாம் என பொறுமையோடு காத்திருந்தனர்.
ஆனால், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் 5 ஆண்டுகள் மட்டுமே ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற விதி உள்ளது. இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூணாக விளங்கிய மகேந்திர சிங் தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா, மாட்டாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
18வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அந்த தொடருக்கான புதிய ஏல விதிமுறைகளை பி.சி.சி.ஐ. வெளியிட்டது. அதில் அன்கேப்ட் வீரர் என்ற விதிமுறையை பி.சி.சி.ஐ. மீண்டும் கொண்டு வந்துள்ளது. இதனால், 5 ஆண்டுகளான வீரர்களை, இந்திய அணிக்காக விளையாடாதவர் என்று கருதி ஊதியத்தை குறைத்துக் கொள்ளும் புதிய விதியை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது. இதனால், தோனி விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: போலீசை அநாகரிகமாக திட்டிய இருவர் தம்பதியே இல்லையா? இருவரை தட்டித் தூக்கிய போலீஸ்.. வெளியான பகீர் தகவல்கள்!
இந்நிலையில், இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், "”தோனி எங்கள் அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எங்களின் ஆசை, அவரின் முடிவுக்காக நாங்கள் காத்து கொண்டிருக்கிறோம். மேலும் இதைபற்றி அவரிடம் கேட்ட போது நான் அக்டோபர் 31ம் தேதி என்னுடைய முடிவை சொல்கிறேன் என தெரிவித்துள்ளார். அவர் ஐபிஎல்லில் விளையாடுவார் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?