இளம் வீரர்களின் கைகளில் அணியை ஒப்படைத்த இந்திய வீரர்கள் - முகமது கைஃப் கருத்து
இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவதைப் பார்த்து ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
டி20 போட்டிகளில் இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவதைப் பார்த்து மூத்த வீரர்கள் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றிய நிலையில், அப்போட்டியில் கேப்டனாக அணியை வழிநடத்திய ரோகிஷ் ஷர்மா, விராட் கோலி, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். மூத்த வீரர்களின் ஓய்வுக்குப் பிறகு டி20 போட்டிக்கான இந்திய அணியில் இளம் வீரர்கள் பலரும் இடம்பிடித்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
ரோஹித் சர்மா ஓய்வுக்குப் பிறகு, இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். இவரது தலைமயில், சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்திய வீரர்கள் தொடர்ந்து சதங்களை விளாசி, தொடரைக் கைப்பற்றினர். இதற்கு மூத்த வீரரான முகமது கைஃப் டி20 போட்டிகளில் இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவதைப் பார்த்து மூத்த வீரர்கள் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, தென்னாப்பிரிக்க ஆடுகளங்களின் கடுமையான சூழல்களில் திலக் வர்மா, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவிப்பதை நினைத்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் கண்டிப்பாக மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். டி20 போட்டிகளை பொருத்தவரையில், இந்திய அணியை அவர்கள் பாதுகாப்பான இளைஞர்களின் கைகளில் ஒப்படைத்துள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களை 3-0 எனக் கைப்பற்றியது. 4 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
What's Your Reaction?