Devara: ரிலீஸுக்கு முன்பே 100 கோடி வசூல்..? பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ஜூனியர் என்டிஆரின் தேவரா!

Actor Junior NTR Devara Movie Box Office Collection : ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தேவரா திரைப்படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sep 25, 2024 - 19:15
Sep 25, 2024 - 19:25
 0
Devara: ரிலீஸுக்கு முன்பே 100 கோடி வசூல்..? பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ஜூனியர் என்டிஆரின் தேவரா!
அட்வான்ஸ் புக்கிங்கில் அசத்தும் தேவரா

Actor Junior NTR Devara Movie Box Office Collection : கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள திரைப்படம் தேவரா. டோலிவுட்டில் கமர்சியல் படங்கள் இயக்குவதில் கில்லாடி இந்த கொரட்டலா சிவா. இதனால் தேவரா படத்துக்கு தெலுங்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஜூனியர் என்டிஆருடன் ஜான்வி கபூர், சையிப் அலிகான், பிரகாஷ்ராஜ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா ஜானரில் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளிலும் தேவரா ரிலீஸாகிறது. 

இந்தப் படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இதனைத் தொடர்ந்து தேவரா(Devara) ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் சென்னை, ஐதராபாத் உட்பட பல இடங்களில் நடைபெற்றன. ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடைசியாக வெளியான ஆர்.ஆர்.ஆர் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் ராம் சரணும் ஹீரோவாக நடித்திருந்தார். ஆர்.ஆர்.ஆர் படத்திற்குப் பின் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தேவரா வெளியாகவுள்ளதால், இப்படத்தை கொண்டாட அவரது ரசிகர்கள் ரெடியாகிவிட்டனர்.

இதனால், தேவரா படத்தின்(Devara Advance Booking) அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் எதிர்பார்த்ததை விட செமையாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி தேவரா திரைப்படம் முதல் நாளில் மட்டும் மொத்தம் 6 ஆயிரம் ஷோ திரையிடப்படவுள்ளதாம். அதற்காக உலகம் முழுக்க 6.50 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் புக்கிங் ஆகியுள்ளதாகவும் பாக்ஸ் ஆபிஸ்(Devara Box Office) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்தியாவில் 28 கோடி உட்பட, உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாம் தேவரா. அதாவது ரிலீஸுக்கு முன்பே தேவரா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 50 கோடியை கடந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

தேவரா தெலுங்கு(Devara Telugu Version) வெர்ஷன் ரிலீஸாகும் திரையரங்குகளில், 90 சதவீதம் டிக்கெட்டுகள் இதுவரை புக் ஆகிவிட்டன. இது இன்று அல்லது நாளைக்குள் 100 சதவீதத்தை தொட்டுவிடும் என சொல்லப்படுகிறது. அதேபோல் தேவரா இந்தி வெர்ஷனுக்கான டிக்கெட் புக்கிங்கும் படுஜோராக நடைபெற்று வருகிறதாம். இதனால் வரும் 27ம் தேதி ரிலீஸாகும் தேவரா, முதல் நாளிலேயே 100 கோடிக்கும்(Devara First Day Box Office Collection) அதிகமாக கலெக்ஷன் செய்துவிடும் என பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் செய்த வசூல் செய்த சாதனையை, தேவரா பிரேக் செய்வது கஷ்டமே எனத் தெரிகிறது. 

தேவரா ரிலீஸாகும்(Devara Release Date) செப் 27ம் தேதி, தமிழில் கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் படமும் வெளியாகிறது. இதனால் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் தேவரா – மெய்யழகன் படங்களுக்கு இடையே கடும் போட்டி காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது தேவரா முதல் பாகத்தின் ரிலீஸுக்குப் பின்னரே, இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் வெளியாகும் என்பது குறிப்பிடடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow