நிறைய ஹீரோயின்ஸ் என் கூட நடிக்க தயங்குனாங்க.. நடிகர் பிரதீப் ரங்கநாதன் உருக்கம்

'டிராகன்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீப் ரங்கநாதன், நிறைய ஹீரோயின்ஸ் என் கூட நடிக்க தயங்குனாங்க என்று கூறினார்.

Feb 14, 2025 - 09:09
 0
நிறைய ஹீரோயின்ஸ் என் கூட நடிக்க தயங்குனாங்க.. நடிகர் பிரதீப் ரங்கநாதன் உருக்கம்
பிரதீப் ரங்கநாதன்

இயக்குநர், நடிகர் என்ற பன்முகத் தன்மை கொண்ட பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிராகன்’. அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கௌதம் மேனன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.  சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ‘டிராகன்’ திரைப்படம் வரும் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன், கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் உட்பட பலர் குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது, ‘லவ் டுடே’ படத்திற்கு கதாநாயகி தேர்வு செய்யும் போது எல்லோரும் என்னுடன் நடிக்க தயங்குனார்கள்.

முதலில் போனபோது ‘கோமாளி’ பட இயக்குநர் என்று சொன்னது எல்லோரும் படத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறினார்கள். நான் தான் கதாநாயகன் என்று சொன்னதும் அனைவரும் என்னுடன் நடிக்க தயங்குனார்கள். அப்படி இருந்த எனக்கு இந்த படத்தில் அனுபமா தான் கதாநாயகி என்று இயக்குநர் சொன்னார்கள்.

அனுபமா அருமையாக நடித்தார். என்னுடன் நடித்த அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஒரு படம் ரிலீஸாகுவதற்கு முன்பே ரசிகர்கள் வருவது கஷ்டம் கயலுக்கு அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். மிஷ்கின் எனக்கு தினமும் பரிசு கொண்டு வருவார். எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் கொண்டு வருவார்.

அவர் ஒரு நல்ல மனிதர். அவர் பேசுவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். ஆனால், நான் நல்ல என்ஜாய் பண்ணுவேன். இந்த படத்திற்கும், எனக்கும் கிடைத்த மிகப்பெரிய பரிசு மிஷ்கின். கெளதம் வாசுதேவ் மேனனை எப்படி மக்கள் பார்க்கிறார்களோ அப்படி தான் அவர் இருக்கிறார். அவர் படத்தின் கதாநாயகன் போன்று இருப்பார்.

கே.எஸ்.ரவிக்குமாரை நான் ‘கோமாளி’ படத்தில் பார்த்தபோது மிகவும் பயமாக இருந்தது. பிறகு அவர் மிகவும் கனிவாக நடந்து  கொண்டபோது அந்த பயம் மரியாதையாக மாறியது. அவர் எனக்கு நல்லது மட்டுமே நினைப்பார். உழைத்தால் வாழ்க்கை நன்றாக மாறும் என்பதற்கு விஜே சித்து ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அர்ஷத் ஒரு நல்ல நடிகன் என்று கூறினார்.

’ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஷ்வத் மாரிமுத்து தொடர்ந்து சிம்புவின் ’காட் ஆஃப் லவ்’ திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow