புஷ்பா பட தயாரிப்பாளரை மேடையிலேயே  வறுத்தெடுத்த தேவி ஸ்ரீ பிரசாத்.. காரணம் இதுதான்

Devi Sri Prasad : 'புஷ்பா-2' புரோமோஷன் நிகழ்ச்சியில் அப்படத்தின் தயாரிப்பாளர் குறித்து தேவி ஸ்ரீ பிரசாத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Nov 26, 2024 - 08:10
Nov 27, 2024 - 06:45
 0
புஷ்பா பட தயாரிப்பாளரை மேடையிலேயே  வறுத்தெடுத்த தேவி ஸ்ரீ பிரசாத்.. காரணம் இதுதான்
தேவி ஸ்ரீ பிரசாத் - அல்லு அர்ஜூன்

Devi Sri Prasad : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான ‘புஷ்பா- தி ரைஸ்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோருக்கு தேசிய விருது கிடைத்தன. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அவர் நீக்கப்பட்டு தமன், சாம் சி.எஸ் ஆகியோர் பின்னணி இசை மேற்கொண்டுள்ளதாகவும் தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

’புஷ்பா-2 தி ரூல்’ திரைப்படம் வரும் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்திற்கான புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசியுள்ள தேவி ஸ்ரீ பிரசாத், ”நாம் செய்யும் வேலைக்கான நன்றியாக இருந்தாலு சரி, சம்பளமாக இருந்தாலும் சரி, எதையும் தயாரிப்பாளர்களிடம் நாம் கேட்டுதான் வாங்க வேண்டும். நான் பாடலை சரியான நேரத்தில் தருவதில்லை என்றும் பின்னணி இசையே சரியான நேரத்தில் தருவதில்லை என்றும் தயாரிப்பாளர் ரவி எப்போதும் என்னை குறை கூறுவார். தயாரிப்பாளருக்கு என் மீது அன்பு இருக்கிறது; இருந்தாலும் அதற்கு மேலாக என் மீது புகார்கள் உள்ளது.

இப்போது கூட நான் நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததாக கூறுகிறீர்கள். ஆனால், நான் 25 நிமிடங்களுக்கு முன்பே வந்துவிட்டேன். ஆனால், நீங்கள் உள்ளே வருவதை படமாக்க வேண்டும் என்று கூறி காக்க வைத்துவிட்டார்கள்” என்று கூறினார்.

இதன் மூலம் மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கும், தேவி ஸ்ரீ பிரசாத்திற்கும் இடையில் பனிப்போர் இருப்பது தெரியவந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், புஷ்பா-2 மற்றும் அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்தும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டுள்ளது உறுதியாகிவிட்டதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow