மணிரத்னத்தை மறைமுகமாக அட்டாக் செய்தாரா பா ரஞ்சித்..? வாழை பட விழாவில் நடந்த தக் லஃப் சம்பவம்!
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில், பா ரஞ்சித் பேசிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அதில், அவர் இயக்குநர் மணிரத்னத்தை மறைமுகமாக அட்டாக் செய்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
சென்னை: பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். தற்போது துருவ் ஹீரோவாக நடிக்கும் பைசன் காளமாடன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கிய வாழை, இந்த வாரம் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை, மாரி செல்வராஜ் தனது ஆட்டோ பயோபிக்காக இயக்கியுள்ளார். வாழை ட்ரைலர் நேற்று வெளியாகி படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், வாழை படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களும் பாசிட்டிவான விமர்சனங்கள் கொடுத்துள்ளனர். நேற்று சென்னையில் நடைபெற்ற வாழை பட ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில், இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா ரஞ்சித், தியாகராஜன் குமாரராஜா, ராம், மிஷ்கின், நெல்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது பேசிய பா ரஞ்சித், இயக்குநர் மணிரத்னத்தை மறைமுகமாக அட்டாக் செய்வது போல பேசியது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாரி செல்வராஜ்ஜின் வாழை படத்தை பார்த்த மணிரத்னம், அதுபற்றி வீடியோ வெளியிட்டுள்ளார். அது நேற்று நடைபெற்ற வாழை ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் ஸ்க்ரீன் செய்யப்பட்டது.
அதில் பேசியிருந்த மணிரத்னம், “மாரிசெல்வராஜ் தமிழ் சினிமாவின் ஸ்ட்ராங்கான வாய்ஸ். வாழை படத்தை பார்த்து பொறாமைப்படுகிறேன், இதில் எப்படி வரது சொந்த ஊரில் வசிக்கும் இத்தனை பேரை நடிக்க வைத்தார் எனத் தெரியவில்லை. எல்லா கேரக்டர்களும் அருமையாக நடித்துள்ளனர்” என பாராட்டியிருந்தார். அதன்பின்னர் மேடையில் பேசிய பா ரஞ்சித், மணிரத்னம் பேசியதை குறிப்பிடாமல் அவரை மறைமுகமாக அட்டாக் செய்தார்.
மேலும் படிக்க - வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
அதாவது, “எனக்கு ரொம்ப பிடித்த டைரக்டர் ஒருவர் என்னுடைய பங்களை பார்த்துள்ளார். ஆனால் என் படங்களை பார்த்துள்ளது பற்றி என்னிடம் கூட இதுவரை சொன்னது கிடையாது. அந்த இயக்குநர் எனது படங்களை பார்ப்பதாக அப்போது அவருடன் இருந்தவர்கள் என்னிடம் கூறியுள்ளனர். இப்போது அதே இயக்குநரை உட்கார வைத்து ‘வாழை’ படத்தைப் பார்க்க வைத்து, அதுபற்றி பேசவும் வைத்து அந்த வீடியோவை இங்கே போட்டுக் காட்டினார் மாரி செல்வராஜ். எனக்கு இப்படிலாம் செய்ய கூச்சமாக இருக்கும், எதாவது ஒரு இயக்குநருக்கு மெசேஜ் செய்து படம் பார்க்க அழைத்தது இல்லை. மாரி செல்வராஜ் இப்போது செய்துள்ளது செம மேட்டர்” என பா ரஞ்சித் பேசியுள்ளார்.
பா ரஞ்சித்தின் இந்த வீடியோவை வைரலாக்கி வரும் நெட்டிசன்கள், அந்த இயக்குநர் மணிரத்னம் தானா என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் உட்பட மற்ற படங்களை பா ரஞ்சித்தும் பாராட்டியது கிடையாது தானே எனவும் நியாயமாக கேள்வி எழுப்பியுள்ளனர். பா ரஞ்சித்தின் இந்த கண்டெண்ட் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்துக்கு செமையான ப்ரோமோஷனாக மாறியுள்ளது.
What's Your Reaction?