Vettaiyan: மனசிலாயோ..! வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள்... Hunter Dude அனிருத் சம்பவம் லோடிங்!
தசெ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து அனிருத் அப்டேட் கொடுத்துள்ளார்.
சென்னை: ஜெயிலர் வெற்றிக்குப் பின்னர், லைகா புரொடக்ஷன்ஸ் பேனரில் 2 படங்களில் கமிட்டானார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதில் முதல் படமான லால் சலாம், இந்தாண்டு பிப்ரவரியில் வெளியானது. ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கிய இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் தசெ ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். இப்படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோரும் ரஜினியுடன் நடித்துள்ளனர்.
வேட்டையனில் சூப்பர் ஸ்டார் ரஜினி ரிட்டையர்ட்டு போலீஸ் ஆபிஸராக நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், மரண தண்டனைக்கு எதிராக அவர் போராடுவது தான் இந்தப் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி எனவும் கூறப்படுகிறது. ஜெய்பீம் படத்தை ஒரு உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து இயக்கியிருந்தார் தசெ ஞானவேல். அதேபோல் தான் ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் உருவாகியுள்ளதாம். மேலும் இந்தப் படம் முழுக்க பல சோஷியல் மெசேஜ் கண்டெட் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியை நேற்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இந்தப் படம், அக்டோபர் 10ம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. சூர்யாவின் கங்குவா திரைப்படமும் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், அதேநாளில் வேட்டையன் வெளியாகும் என்பதை படக்குழு கன்ஃபார்ம் செய்துள்ளது. இதனால், கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் வேட்டையன் – கங்குவா இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்டையன் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம் ஆகிவிட்டதால், அடுத்த அப்டேட்டுக்காக ரஜினியின் ரசிகர்கள் காத்திருந்தனர்.
மேலும் படிக்க - ட்ரோல்கள் எல்லாம் பழகிடுச்சு- பா ரஞ்சித் ஆவேசம்!
அவர்களுக்கு ஸ்வீட் அப்டேட் கொடுத்துள்ளார் வேட்டையன் இசையமைப்பாளர் அனிருத். பேட்ட, தர்பார், ஜெயிலர் படங்களைத் தொடர்ந்து ரஜினி – அனிருத் கூட்டணி வேட்டையனிலும் இணைந்துள்ளது. ஜெயிலரில் அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும் தான் படத்துக்கு பெரிய பலமாக இருந்தது. அதனால் வேட்டையன் படத்திலும் அனிருத் மாஸ் காட்டுவார் என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த நிலையில் வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என ட்வீட் செய்துள்ள அவர், ’மனசிலாயோ’ என்ற கேப்ஷனுடன் பாடலின் டைட்டிலையும் அறிவித்துள்ளார். அதேபோல், ‘Hunter Vantaar’ என்றும் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
அனிருத்தின் அப்டேட்டை அடுத்து வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெக்கார்டிங்கில் ரஜினி பங்கேற்ற போட்டோ வைரலாகி வருகிறது. இந்தப் பாடலை ரஜினியே பாடியுள்ளாரா அல்லது வாய்ஸ் மட்டும் கொடுத்துள்ளாரா என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இதன் தொடர்ச்சியாக வேட்டையன் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 20ம் தேதி நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், சீக்கிரமே அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது. இந்நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கவும் வாய்ப்புள்ளது.
வேட்டையன் பாடல்... அனிருத் கொடுத்த அப்டேட்#Kumudamnews | #kumudam | #Kumudamnews24x7 #Manasilayo #Vettaiyan #HunterVantaar #Rajinikanth
What's Your Reaction?