Vaazhai Box Office Collection Day 1 : மாரி செல்வராஜ்ஜின் வாழை முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!

Vaazhai Box Office Collection Day 1 : மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து இப்போது பார்க்கலாம்.

Aug 24, 2024 - 07:02
Aug 24, 2024 - 11:51
 0
Vaazhai Box Office Collection Day 1 : மாரி செல்வராஜ்ஜின் வாழை முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!
வாழை முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்

Vaazhai Box Office Collection Day 1 : மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் வாழை. இயக்குநர் மாரிசெல்வராஜ்ஜின் ஆட்டோ பயோபிக் மூவியாக உருவாகியுள்ள இத்திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ஏற்கனவே பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் மாரி செல்வராஜ். இதனால் வாழை படம் மூலம் அவர் யார், அவரது பின்னணி என்ன என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். முன்னதாக இந்தப் படத்தை இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன், பா ரஞ்சித், மணிரத்னம், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் பாராட்டியிருந்தனர்.

இதனால் வாழை படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், நேற்று வெளியான இந்தப் படம், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. வாழை, மாரி செல்வராஜ்ஜின் பள்ளிப் பருவத்தில் நடந்த கதை என்பதால், இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் தான் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். அவர்களது டீச்சராக நிகிலா விமலும், முக்கியமான கேரக்டரில் கலையரசனும் நடித்துள்ளனர். உண்மைக்கு நெருக்கமான வாழ்வியல் திரைப்படமாக வாழை உருவாகியுள்ளதாக படம் பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டுத் தெரிவித்திருந்தனர்.

அதேபோல், வாழை படத்தின் கிளைமேக்ஸில் மாரி செல்வராஜ் எல்லோரையும் அழ வைத்துவிட்டார். அப்படியொரு உணர்வுப்பூர்வமான கிளைமேக்ஸ் எனவும் ரசிகர்கள் பாராட்டியிருந்தனர். இப்படி விமர்சன ரீதியாக வாழை படத்தை ரசிகர்கள் கொண்டாடினாலும், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை என்றே தெரிகிறது. அதன்படி, வாழை திரைப்படம் முதல் நாளில் 1.5 முதல் 2 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தப் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளதால், சனி (இன்று), ஞாயிறு (நாளை) என இரு தினங்களுக்கும் டிக்கெட் புக்கிங் நன்றாக இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.    

மேலும் படிக்க - மாரி செல்வராஜ்ஜின் வாழை படம் எப்படி இருக்கு... ரசிகர்கள் கருத்து!

இதனால் இன்றும் நாளையும் வாழை படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமர்சனம் நன்றாக இருந்தும் வாழை படத்தின் வசூல் குறைய சில காரணங்கள் உள்ளன. அதாவது கடந்த வாரம் (ஆக.15) சீயான் விக்ரமின் தங்கலான், அருள்நிதி நடித்த டிமான்டி காலனி 2 படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவதால், வாழை படத்துக்கு குறைவான ஸ்க்ரீன்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இன்னொரு பக்கம் சூரி ஹீரோவாக நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படமும் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதுபோன்ற காரணங்கள் தான் வாழை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் இப்படத்தின் மொத்த பட்ஜேட்டே 10 முதல் 12 கோடி ரூபாய் வரை தான் இருக்கும் எனவும், அதனடிப்படையில் பார்த்தால் வாழை திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் தரமான சம்பவம் தான் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று முதல் பல திரையரங்குகளில் வாழை படத்துக்கு அதிக ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow