Brother Review: ஜெயம் ரவிக்கு கம்பேக் கொடுத்ததா ப்ரதர்..? முழு திரை விமர்சனம் இதோ!

ஜெயம் ரவி, பூமிகா, ப்ரியங்கா மோகன் நடித்துள்ள ப்ரதர் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக இன்று வெளியாகியுள்ளது. எம் ராஜேஷ் இயக்கியுள்ள ப்ரதர் படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

Nov 1, 2024 - 01:18
 0
Brother Review: ஜெயம் ரவிக்கு கம்பேக் கொடுத்ததா ப்ரதர்..? முழு திரை விமர்சனம் இதோ!
ஜெயம் ரவியின் ப்ரதர் திரை விமர்சனம்

சென்னை: ராஜேஷ் எம் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், நட்டி, பூமிகா நடிப்பில் உருவான படம் பிரதர். தலைப்புக்கு ஏற்ப அக்கா - தம்பி பாசம் தான் கதை. ஊட்டியில் டீச்சராக வேலை பார்க்கும் அக்கா பூமிகா வீட்டுக்குச் செல்லும் ஜெயம் ரவியின் சேட்டைகளால் பிரச்சினை உண்டாகிறது. இதனால் கணவர் நட்டியை பிரிகிறார் பூமிகா... பாசக்கார தம்பி என்ன செய்கிறார்... தம்பதிகள் சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் ப்ரதர் படத்தின் ஒன்லைன். 

ராஜேஷ் எம் படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். இதில் பாசம், எமோஷனல் அதிகம். சேட்டைக்கார தம்பியாக ஜெயம் ரவி ஓரளவு நடித்து இருக்கிறார். ஹீரோயின் பிரியங்கா மோகன் வந்து போகிறார். காமெடிக்கு விவிடி கணேஷ்; ஆனால், சந்தானம் மாதிரி இவர் கூட்டணி பெரிதாக செட்டாகவில்லை. எம்.எஸ். பாஸ்கர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் கலகல, மற்றபடி சிரிப்பு சத்தம் மிஸ்ஸிங். 

பூமிகா நடிப்பில் கவனிக்க வைக்கிறார், ஆனால் ஸ்கோர் பண்ண வேண்டிய இடத்தில் ஏமாற்றி இருக்கிறார். பூமிகா மாமனாராக வரும் ராவ் ரமேஷ் மனதில் நிற்கிறார்..மாமியாராக நடித்துள்ள சரண்யா மேனரிசம் புதுமையாக இருக்கிறது, இருந்தாலும்.படத்துடன் ஒட்டவில்லை.

பெரும்பாலான கதை ஊட்டியில் நடக்கிறது, அந்த காட்சிகள் கலர்ஃபுல்லாக உள்ளன. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மாக்கமிஷி பாடல் ஓகே. அக்காவை அவர் குடும்பத்தினருடன் சேர்த்துவைக்கும் கதை என்பதால், காதல், காமெடிக்கு அதிக இடமில்லை. இடைவேளைக்கு பின் வழக்கமான திரைக்கதையால் வேகம் குறைகிறது. கிளைமாக்ஸ் அக்மார்க் சினிமாத்தனம். பிரதர் ஜெயம் ரவி படம் மாதிரியும் இல்லை.. ராஜேஷ். எம் படம் மாதிரியும் இல்லை. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow