IPL 2025: சேப்பாக்கம் மைதானத்தில் CSK வெற்றி தொடருமா? 17 வருடக்கனவு RCB-க்கு நிறைவேறுமா?

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் திருவிழா போல இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மைதாங்களில் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் 18 வது சீசனின் 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றனர். 

Mar 28, 2025 - 18:01
Mar 28, 2025 - 18:08
 0
IPL 2025:  சேப்பாக்கம் மைதானத்தில் CSK வெற்றி தொடருமா? 17 வருடக்கனவு RCB-க்கு நிறைவேறுமா?

சென்னை அணி தங்களுடைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த நிலையில், 2- வது வெற்றியை நோக்கி களம் காண்கிறது. பெங்களூரு அணி ஐபிஎல் தொடக்கப்போட்டியில், கொல்கத்தா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இரண்டு அணிகளும் தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்த நிலையில், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புள்ளிப்பட்டியலில் முதலிடம்

ஐபிஎல் தொடக்கப்போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தியன் மூலம் புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம் பிடித்தது. ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதை தொடர்ந்து, சன்ரைசர்ஸ் அணி முதலிடம் பிடித்தது. பின்னர், தங்களுடைய  2வது லக்னோ அணியுடன் தோல்வியை தழுவியதால், தற்போது மீண்டும் ஆர்சிபி முதலிடம் பிடித்துள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை ஆர்சிபி தக்கவைத்துக்கொள்ளும். 

 17 வருடக்கனவு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்,  சிஎஸ்கேவை பெங்களூரு அணி வீழ்த்தி 17 வருடங்கள் ஆகிறது.. சென்னையின் வெற்றிப்பயணம் தொடருமா? இல்லை ஆர்சிபி தன்னுடைய 17 வருடக்கனவை நிறைவேற்றுமா? என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும், கடந்த ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஆர்சிபி வீழ்த்தியது. அப்போது மைதானத்திலும், மைதானத்திற்கு வெளியிலும், பெங்களூரு ரசிகர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டதற்கு சென்னையில் பழிதீர்க்கும் எண்ணத்தில் சேப்பாக்கத்திற்கு சிஎஸ்கே ரசிகர்கள் செல்கின்றனர் என்று சமூக வலைதளத்தில் கருத்து தெரிவிக்கின்றனர். 

இன்றையப்போட்டி இன்று 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியின் நேரலைக்காட்சிகளை ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோஹாட்ஸ்டாரிலும் காணலாம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow