TATA IPL 2025: புதிய கேப்டன்களுடன் களமிறங்கும் LSG, DC.. வெல்லப்போவது யார்?
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 4வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று (மார்.24) மோதுகின்றன. இரண்டு அணிகளும் இந்த சீசனில் புதிய கேப்டன்களுடன் களம் காண்கின்றன.

விசாகபட்டினத்தில் அமைந்துள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ACA-VDCA மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. கடந்த சீசன்களை போல் இல்லாமல் மிகப்பெரிய மாற்றங்களுடன் இரண்டு அணிகளிலும் களம் காண்கின்றன. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
டெல்லி அணியின் கேப்டனாக யார் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து காணப்பட்ட நிலையில், இந்திய அணியின் ஆல் ரவுண்டரான அக்சர் படேல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ரிஷப் பண்ட் டெல்லி அணியின் செல்லப்பிள்ளையாக இருந்துவந்த நிலையில், லக்னோ அணி சார்பில் மிக அதிகமான தொகைக்கு அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டது சர்ச்சையானது. பணத்திற்காக ரிஷப் பண்ட் விலைப்போனார் என்றும் விமர்சிக்கப்பட்டது.
ரிஷப் பண்ட் - கே.எல். ராகுல்
லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல் ராகுல் அணியின் நிர்வாகத்தில் மிகவும் மோசமாக நடத்தப்பட்டது அவரது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. அப்போதே ராகுல் இனி லக்னோ அணியில் தொடரமாட்டார் என்ற பேசப்பட்டு வந்தது. டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் லக்னோ அணி ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக தொகையான ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல். ராகுல் டெல்லி அணி சார்பில் ரூ. 14 கோடிக்கு வாங்கப்பட்டார்.
இரு அணிகளின் பலம்:
டெல்லி அணியை பொறுத்தவரையிலும் ரிஷப் பண்ட் கேப்டனாகவும், தனிப்பட்ட வீரராக பேட்டிங் மற்றும் பவுலிங் என்று சிறப்பாக செயல்பட்டார். அணியின் வெற்றிக்கு உதவியதில் ரிஷப் பண்டின் பங்கு அளப்பறியது. அதேப்போல் கே.எல். ராகுலும், அணியின் கேப்டனாகவும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சிறப்பாகவே செயல்பட்டார். இவர்களின் இந்த இடமாற்றம் தற்போது இவர்கள் இருக்கும் அணிக்கு பலமாகவே பார்க்கப்படுகிறது.
டெல்லி அணியில் லோகேஷ் ராகுல், டுபிளிஸ்சிஸ், டிரிஸ்டான் ஸ்டப்ஸ். மெக்குர்க், அஷூதோஷ் ஷர்மாவும், பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க். டி.நடராஜன், முகேஷ் குமார். குல்தீப் யாதவும், ஆல்-ரவுண்டராக அக்சர் படேல் ஆகியோர் பலமாக உள்ளனர். லக்னோ அணியில் ரிஷப் பண்ட், மார்க்ரம். ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், நிகோலஸ் பூரன், மிட்செல் பேட்டிங்கிலும், ஷமார் ஜோசப், ரவி பிஷ்னோய். ஹங்கர்கேகர் ஆகியோர் பந்து வீச்சிலும் பலம் சேர்க்கின்றனர்.
நேருக்கு நேர்:
ஐ.பி.எல் போட்டிகளில் இரண்டு அணிகளும், 5 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், டெல்லி 2 போட்டிகளிலும், லக்னோ 3 போட்டிகளும் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு புதிய கேப்டன்களும் தங்களுடைய அணிக்காக முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாட உள்ளதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
உத்தேச ப்ளேயின் லெவன் வீரர்கள்:
டெல்லி கேப்பிடல்ஸ்:
ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல், கே.எல். ராகுல், அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் ஷர்மா, மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், டி நடராஜன், (இம்பேக்ட் பிளேயர்: கருண் நாயர்/மோஹித் ஷர்மா).
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
அர்ஷின் குல்கர்னி, மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவி பிஷ்னோய், ஷமர் ஜோசப் (இம்பேக்ட் பிளேயர்: ஆகாஷ் சிங்/ஷாபாஸ் அகமது/மணிமாறன்).
What's Your Reaction?






