"பொட்டு வச்ச தங்கக் குடம்" களமிறங்கிய தோனி .. சேப்பாக்கத்தை அதிரவைத்த ரசிகர்கள்

TATA ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியை தொடக்கப்போட்டியாக ரசிகர்கள் கொண்டாடினர். தோனியின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்றையப் போட்டி விருந்தாக அமைந்தது. 

Mar 24, 2025 - 11:55
Mar 24, 2025 - 12:58
 0
"பொட்டு வச்ச தங்கக் குடம்"  களமிறங்கிய தோனி .. சேப்பாக்கத்தை அதிரவைத்த ரசிகர்கள்

டாஸ் வென்ற கேப்டன் ருத்துராஜ்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 3 லீக் போட்டியில் கேப்டன் ருத்துராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ஃபீல்டிங் தேர்வு செய்தார். சென்னை அணி டாஸை வென்றதும் ஸ்டேடியத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

ருத்துராஜை பொறுத்த வரை டாஸ் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. கேப்டனாக அவர் விளையாடியுள்ள 14 போட்டிகளில் 3 முறை மட்டுமே டாஸ் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

குறைவான இலக்கு

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகக்குறைவான இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இந்த ஸ்கோரை அடித்து விடுவார்கள் என்று நினைத்த ரசிகர்களுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய ராகுல் திரிபாதி 2 ரன்னில் ஆட்டமிழக்க, ருத்துராஜ் மற்றும் ரச்சின் இருவரும் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தனர்.

We Want Dhoni

கேப்டன் ருத்துராஜின் விக்கெட்டை மும்பை அணியின் இளம் வீரர் விக்னேஷ் புதூர் வீழ்த்திய நிலையில், மறுபுறம் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். தோனி 4-வது வீரராக தோனி களமிறங்க மாட்டார் என்று தெரிந்தும் சிஎஸ்கே ரசிகர்கள் We Want Dhoni என்று கர்ஜித்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய சென்னை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், களத்தில் தனி ஆளாக போராடினார் ரச்சின் ரவீந்திரா. ஆரம்பத்தில் 15 ஓவரில் மேட்ச் முடிந்து விடும் என்று கூறிக்கொண்டிருந்த ரசிகர்கள் ஒரு கட்டத்தில், எப்படியாவது தோனி பேட்டிங் செய்ய களமிறங்க வேண்டும் என்பதற்காகவே காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் நம்பிக்கை இழந்த ரசிகர்கள் அமைதியாகவே இருந்தனர். ஜடேஜாவை தீபக் சாஹர் ரன் அவுட் செய்த மறுகனம் விண்ணை பிளக்கும் அளவிற்கு ஸ்டேடியம் அதிர்ந்தது. 

122 டெசிபல் சத்தம்

சேப்பாக்கத்தின் கெத்து தோனி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய தருணம், DJ  ஒலிக்க விட்ட பொட்டு வச்ச தங்கக்குடம் ஊருக்கு நீ மகுடம் என்ற பாடல், சென்னையை அதிரும் அளவிற்கு 122db வரை ரசிகர்கள் கர்ஜித்தது என சினிமாவை விஞ்சும் அளவிற்கான காட்சிகள் ஸ்டேடியத்தில் அரங்கேறின.  அவ்வளவு தான் ஸ்டேடியத்தில் சத்தம் அடங்க ஒரு சில நிமிடங்கள் ஆனது.

தல தரிசனம்

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியின் வெற்றிக்காக காத்திருந்த 40 ஆயிரம் ரசிகர்களைவிட தோனியின் வருகைக்காக காத்திருந்த ரசிகர்களே அதிகம்.  மைதானத்தில் தோனி வருகைக்காக காத்திருந்த அத்தனை ரசிகர்களின் கண்களுக்கும் நேற்று விசுவல் ட்ரீட்டாக அமைந்தது தோனியின் எண்ட்ரீ.  'நீ பொட்டு வச்ச தங்கக் குடம், ஊருக்கு நீ மகுடம் என்ற பாடல் ரசிகர்களுக்கு லைஃப் டைம் மொமண்டாக அமைந்தது. 

களத்தில் இறங்கிய தோனி தன்னுடைய Signature Shot- ஆன ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மேட்சை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், 2 பந்துகளை எதிர்கொண்ட தோனி  ரன் எதுவும் எடுக்காத நிலையிலும், அவரது பேட்டிங்கை பார்த்து விட வேண்டும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தல தரிசனம் கிடைத்துவிட்டது. கடைசி ஓவரின் முதல் பந்தில் ரச்சின் சிக்சர் அடித்து போட்டியை முடித்த நிலையில், சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  தோனியின் எண்ட்ரி சாங் போதும், அவர் ஸ்டேடியத்தில் பேட்டிங் செய்ததை பார்த்ததே போதும் என்று எண்ணிய ரசிகர்களுக்கு நேற்றையப்போட்டி மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow