மின்னல் வேக ஸ்டம்பிங்.. 0.12 நொடியில் SKY விக்கெட்டை எடுத்த Dhoni!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான 3 வது லீக் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

Mar 24, 2025 - 13:35
Mar 24, 2025 - 14:50
 0
மின்னல் வேக ஸ்டம்பிங்.. 0.12 நொடியில் SKY விக்கெட்டை எடுத்த Dhoni!
மின்னல் வேக ஸ்டம்பிங்.. 0.12 நொடியில் SKY விக்கெட்டை எடுத்த Dhoni!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனி மும்பை வீரர் சூர்யாகுமார் யாதவை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வயசானாலும்,  உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னவிட்டு போகல என்ற படையப்பா படத்தில் நீலாம்பரி சொல்லும் வசனம் கச்சிதமாக தோனிக்கு பொருந்தும். காரணம் 42 வயதைக் கடந்துவிட்ட தோனியின் ஸ்டம்பிங் தான்.

நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவை விக்கெட் கீப்பர் தோனி ஸ்டம்பவுட் செய்தது வைரலாகி வருகிறது. காரணம், தோனிக்கு வயதாகிவிட்டது ஓய்வை அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பலரும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.  ஆனால், 42 வயதில் மிகவும் இளமையாகவும், துடிப்பாகவும் இருக்கிறார் தோனி. ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் தோனி எப்படி தன் உடலமைப்பை இவ்வளவு கட்டுகோப்பாகவும், இளமையாகவும் வைத்துள்ளார் என்று சிலாகிக்கும் ரசிகர்கள 'தல என்னைக்குமே தலதான்' என்று புகழ்ந்து வருகின்றனர். 

ரோகித் விக்கெட்டை முதல் ஓவரிலேயே இழந்த மும்பை அணி,  அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.  4 விக்கெட்டுக்காக சிஎஸ்கே நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் நூர் அகமது வீசிய பந்தை அடிப்பதற்காக க்ரீசை விட்டு வெளியே வந்தார். பந்து பேட்டிற்கு செல்லாமல் வேறுபக்கம் சென்ற நிலையில், உடனடியாக பந்தை பிடித்த தோனி ஸ்டம்பிங் செய்து சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை வீழ்த்தினார். DRS  மற்றும் ஸ்டம்பிங் செய்வதில் தோனி வல்லவர். ஆனால் நேற்றைய போட்டியில் 0.12 வினாடிகளில் ஸ்டம்பிங் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவை அவர் ஸ்டம்பிங் செய்து தோனி நேற்றைய போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். சூர்யகுமார் தோனியின் வேகத்தை கண்டு திகைத்துப் நின்றார். ரசிகர்கள் மறுபுறம் தோனி, தோனி என்று முழக்கமிட்டு உற்சாகம் அளித்தனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow