இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி.. ஆர்வத்துடன் கண்டு ரசித்த மக்கள்..!
சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் 49 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியினை காண ஏராளமான மக்கள் குவிந்தனர்.
காணும் பொங்கலை முன்னிட்டு இன்று சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் 49வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சிகளை காண ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர்.
சென்னை தீவுத்திடலில் நடந்து வரும் 49வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் பல்வேறு திட்டங்களின் செயல் மாதிரிகளுடன் அரசு துறைகளின் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 41 மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அரங்குகள், மத்திய அரசின் சென்னை துறைமுகம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அரங்குகள் உள்பட 43 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்நாடு அரசின் காவல்துறை, சுற்றுலாத்துறை, வேளாண்துறை, வனத்துறை, இந்து சமய அறநிலையத்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகளை விளக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அருங்காட்சியகங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. கண்காட்சியை காண சிறியோர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக கண்காட்சியினை கண்டு ரசித்தனர்.
பொருட்கட்சியின் நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.40, சிறுவர்களுக்கு (4வயது முதல் 10 வயது வரை) ரூ.25, மாணவ, மாணவியர்களுக்கு (சலுகை கட்டணம்) ரூ.25, பொருட்காட்சி நேரம் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை அலுவலக நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை, சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.
காணும் பொங்கல் தினமான இன்று சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் 49 வது சுற்றுலா மற்றும் தொழில் பொருள் கண்காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
What's Your Reaction?