Erode East By Election 2025: வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தும் விதமாக, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 53 இடங்களில், 237 வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இந்த இடைத்தேர்லில் திமுக, நாம் தமிழர் கட்சி உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒரு வாக்குச்சாவடிக்கு மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்களும், கூடுதலாக 20 சதவீத வாக்குப்பதிவு இயந்திரமும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ஈரோடு இடைத்தேர்தலுக்கு தேவையான 852 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், , 284 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 284 வி.வி.பேட் ஆகியவை கடந்த 25ம் தேதி தயார் படுத்தப்பட்டு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் துவங்கியுள்ளது.
இந்த பணிகளுக்கு தேவையான பேலட் சீட்டுகள் அனைத்தும் ஏற்கெனவே சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்து. இதனையடுத்து, தற்போது வேட்பாளா்கள், மற்றும் அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த பணிகளை, கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இன்று துவங்கியுள்ள வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள், அதிகபட்சம் மூன்று நாட்கள் நடைபெறும் என்றும் இதில் சுமார் 200 அலுவலர்கள், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்,ாதகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணிகள் நிறைவடைந்த பிறகு, மாதிரி வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளது. அப்போது, ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் உடனடியாக சரி செய்யப்படும் என்றும்
அதன் பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பு அறையில் மீண்டும் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டு, வாக்குப்பதிவின் போது சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்து செல்லப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதேபோல வாக்குப்பதிவின் போது, வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், வேட்பாளர்களின் விபரங்கள் கொண்ட ‘பேலட் ஷீட்’ மாதிரியான போஸ்டர்கள், அதற்கான ஒப்பந்ததாரர்கள் மூலம் அச்சிடப்பட்டு, பிப்ரவரி 4ம் தேதி வாக்குச்சாவடிகளில் ஒட்டப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?