'அந்தியோதயா' ரயில் 9 நாட்கள் ரத்து.. 'வைகை' புறப்படும் இடம் மாற்றம்.. முக்கிய அறிவிப்பு!

சென்னை எழும்பூர்-திருச்சி இடையே இயக்கப்படும் 'ராக்போர்ட்' அதிவிரைவு ரயில் வரும் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரையும், ஆகஸ்ட் 1ம் தேதியும் எழும்பூருக்கு பதிலாக இரவு 12.40 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்லும்.

Jul 16, 2024 - 08:50
Jul 16, 2024 - 16:23
 0
'அந்தியோதயா' ரயில் 9 நாட்கள் ரத்து.. 'வைகை' புறப்படும் இடம் மாற்றம்.. முக்கிய அறிவிப்பு!
anthyotha train cancelled

சென்னை: சென்னை நகரில் சென்ட்ரல், எழும்பூர் என இரண்டு பிரதான ரயில் நிலையங்கள் உள்ளன. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வட இந்திய நகரங்களுக்கும், சேலம், கோவை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர சென்னையின் 3வது முனையமாக இருக்கும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி, ஹைதராபாத்துக்கும், செங்கோட்டை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கும் ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன.

இது தவிர எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில்  நின்று செல்லும். இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலைய யார்ட் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக ஜூலை 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரயில் சேவையில் பல்வேறு மாற்றங்களை செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

* தாம்பரம் - நாகர்கோயில் இடையே இயக்கப்படும் முழுவதும் முன்பதிவில்லா பெட்டிகளை கொண்ட அந்தியோதயா விரைவு ரயில் வரும் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக நாகர்கோயில்-தாம்பரம் இடையே இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயிலும் மேற்கண்ட நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

* சென்னைஎழும்பூர்-மதுரை இடையே இயக்கப்படும் 'வைகை' அதிவிரைவு ரயில் வரும் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை சென்னை எழும்பூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக நண்பகல் 2.50 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்லும்.

* சென்னை எழும்பூர்-திருச்சி இடையே இயக்கப்படும் 'ராக்போர்ட்'  அதிவிரைவு ரயில் வரும் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரையும், ஆகஸ்ட் 1ம் தேதியும் எழும்பூருக்கு பதிலாக இரவு 12.40 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்லும்.

*தாம்பரம்-ஹைதராபாத் இடையே இயக்கப்படும் 'சார்மினார்' அதிவிரைவு ரயில் வரும் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை தாம்பரத்துக்கு பதிலாக மாலை 6.20 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும். 

*சென்னை எழும்பூர்-சேலம் இடையே இரவு 11.55 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை சென்னை கடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

* தாம்பரம்-செங்கோட்டை இடையே இரவு 9 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் வரும் 24ம் தேதி, 25ம் தேதி, 28 மற்றும் 30ம் தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து இரவு 11.15 மணிக்கு செங்கோட்டை புறப்பட்டு செல்லும்.

*சென்னை எழும்பூர்-மங்களூரு விரைவு ரயில் வரும் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை சென்னை-திருச்சி இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட நாட்களில் இந்த ரயில் திருச்சியில் இருந்து மங்களூரு புறப்பட்டு செல்லும். மறுமார்க்கமாக மங்களூருவில் இருந்து திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும்.

*காரைக்குடி-சென்னை எழும்பூர் 'பல்லவன்' அதிவிரைவு ரயில்   வரும் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow