சானியா மிர்சாவுடன் திருமணமா?.. மனம் திறந்த முகமது ஷமி.. பரபரப்பு பேச்சு!

''நான் எனது போனை ஆன் செய்து பார்த்தால் இது தொடர்பான மீம்ஸ்கள், வதந்திகள் உலா வருவதை பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து இதை செய்வதில்லை. போலியான சமுகவலைத்தள பக்கங்களை உருவாக்கி இதை செய்து வருகின்றனர்'' என்று முகமது ஷமி கூறியுள்ளார்.

Jul 20, 2024 - 18:26
Jul 21, 2024 - 06:18
 0
சானியா மிர்சாவுடன் திருமணமா?.. மனம் திறந்த முகமது ஷமி.. பரபரப்பு பேச்சு!
Mohammed Shami

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. பும்ராவுக்கு இணையாக பல்வேறு போட்டிகளில் இந்திய அணியை தனி ஆளாக வெற்றி பெற வைத்த இவர் காயம் காரணமாக அண்மையில் நடந்த டி20 உலகக்கோப்பையில் விளையாடவில்லை.

முகமது ஷமி ஒரு கிரிக்கெட் வீரராக தனது வாழ்க்கையில் ஜொலித்தாலும், இல்லற வாழ்க்கையில் ஜொலிக்கவில்லை. இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதேபோல் இந்தியாவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தானை சேர்ந்த கணவர் ஷோயிப் மாலிக்கை விவகாரத்து செய்து குழந்தைகளுடன் தனியே வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையே முகமது ஷமியும், சானியா மிர்சாவும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. முகமது ஷமி-சானியா மிர்சா இருவரது புகைப்படங்களையும் சேர்த்து வெளியிட்ட சில நெட்டிசன்கள், இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என்பது போன்ற தகவல்களை தொடர்ந்து பரப்பி வந்தனர்.

இதைபார்த்த பொதுமக்கள் இது உண்மையான செய்தியா? இல்லை வதந்தியா? என கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த முகமது ஷமி, ''இதுபோன்ற தவறான செய்திகள் ஒரு சிலரால் பகிரப்பட்டு வருகிறது.

நான் எனது போனை ஆன் செய்து பார்த்தால் இது தொடர்பான மீம்ஸ்கள், வதந்திகள் உலா வருவதை பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து இதை செய்வதில்லை. போலியான சமுகவலைத்தள பக்கங்களை உருவாக்கி இதை செய்து வருகின்றனர்.

உங்களுக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால், உங்களுடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து இதுபோன்ற தகவல்களை கூறுங்கள். நான் அப்போது பதில் அளிக்கிறேன். விளையாட்டுக்காக இதுபோன்ற செய்திகள் பரப்பப்பட்டாலும், சம்பந்தப்பட்டவர்கள் இதன்மூலம் மனதளவில் எவ்வளவு காயம் அடைவார்கள் என்பதை வதந்தி பரப்புபவர்கள் உணர வேண்டும்.

இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்புவதை விட்டு, விட்டு சமூககவலைத்தளங்கள் மூலம் மக்களுக்கு உதவி செய்து உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று முகமது ஷமி தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார். முகமது ஷமியின் விளக்கம்மூலம் தற்போது தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சமுகவலைத்தளங்களில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாததால், ஒரு சிலர் அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் குறித்து அவதூறு பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆகவே மத்திய அரசு சமுகவலைத்தளங்களை கண்காணிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow