’வெளிய சொன்னா கொன்னுடுவேன்’ மிரட்டிய ரியல் எஸ்டேட் அதிபர்? பணத்தை இழந்த அப்பாவி பெண்

“நெஞ்சே நெஞ்சே நீ எங்கே” என அயன் பட சூர்யா ஸ்டைலில் ரீல்ஸ் போட்டு, திருமணமான பெண்ணுக்கு காதல் தூதுவிட்ட ரியல் எஸ்டேட் அதிபர், ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

Feb 12, 2025 - 21:26
Feb 13, 2025 - 17:05
 0
’வெளிய சொன்னா கொன்னுடுவேன்’  மிரட்டிய ரியல் எஸ்டேட் அதிபர்?  பணத்தை இழந்த அப்பாவி பெண்
’வெளிய சொன்னா கொன்னுடுவேன்’ மிரட்டிய ரியல் எஸ்டேட் அதிபர்? பணத்தை இழந்த அப்பாவி பெண்

திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர், ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்துவிட்ட நிலையில், இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்னர், திருச்சியில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது மனோஜ் என்பவரும் அதே அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்துள்ளார். மனோஜ்ஜுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டாலும், அந்த பெண்ணிடம் தனக்கு திருமணம் ஆகவில்லை எனக் கூறி நட்பாக பழகியதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் நாம் தனியாக அலுவலகம் ஆரம்பித்து தொழில் செய்யலாம் என அந்தப் பெண்ணிடம் மனோஜ் கூறியதாக தெரிகிறது. இதற்கு ஓகே சொன்ன அந்தப் பெண், அவரால் முடிந்தளவு பணத்தை ரெடி செய்தும் கொடுத்துள்ளார். இதனையடுத்து இருவரும் சேர்ந்து, திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகேயுள்ள மாருதி நகரில் ரியல் எஸ்டேட் அலுவலகம் ஆரம்பித்துள்ளனர். ரியல் எஸ்டேட் பிஸினஸ் நல்லபடியாக போய்கொண்டிருக்க, நான் உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறியுள்ளார் மனோஜ். 

ஆரம்பத்தில், இதற்கு மறுப்புத் தெரிவித்த அந்த பெண், தனக்கு இரண்டு மகன்கள் இருப்பதாகவும், அவர்களுக்காகவே இப்போது வரை மறுமணம் செய்யாமல் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார். அப்போதும் விடாத மனோஜ், ஆபிஸில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, கதவை அடைத்துவிட்டு அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின்னர் தொடர்ந்து மனோஜ் ஆசை வார்த்தையாக பேசி, நெருங்கி பழக, ஒருகட்டத்தில் இருவரும் சுற்றுலா செல்வதையும் வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. 

அப்போது தொழில் தேவைக்காக மேலும் 3 சவரன் நகை, 2 லட்சம் பணத்தையும் மனோஜ் வாங்கி செலவு செய்துள்ளார். இதனிடையே இதுகுறித்து மனோஜின் மனைவிக்கு தெரியவர, அவர் அந்த பெண்ணிடம் தகராறு செய்துள்ளார். அப்போது தான் மனோஜுக்கு திருமணம் ஆன விஷயமே அவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், மனோஜிடம் அவரது நகையையும் பணத்தையும் கேட்டுள்ளார். அதற்கு எதையும் திருப்பித் தர முடியாது, நமக்குள் நடந்ததை வெளிய சொன்னா உன்னை கொன்னுடுவேன் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும் உல்லாசமாக இருந்த புகைப்படம், வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் எனவும் மிரட்டியதாகவும் தெரிகிறது. 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், தனக்கு நடந்தது பற்றி பாதிக்கப்பட்ட அந்த பெண் கூறுகையில், உன்னுடைய இரண்டு மகன்களையும் பார்த்துக்கொள்கிறேன் எனக் கூறி, மனோஜ் என்னை பயன்படுத்திக்கொண்டார். மேலும் என்னுடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை அவரது நண்பருக்கும் அனுப்பி என்னை மிரட்டி வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.  இந்தச் சம்பவம் திருச்சி பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow