இ.பி.எஸ் பற்றி பேசிவது வீண்.. அவரின் தன்மானம் அரசியல் தெரியும் - சேகர் பாபு அதிரடி
எடப்பாடி பழனிசாமி ஒரு நிலையில்லா மனிதர் என்றும் அவரை பற்றி பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மற்றும் நடைபெறவுள்ள பல்வேறு பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம், புதிய குடியிருப்பு திட்ட பணிகள் அமைத்தல் ஆகிய பணிகளையும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “புதிதாக 776 வீடுகள் கட்டப்பட உள்ளோம். வால்டாக்ஸி சாலையில் 700 குடியிருப்புகள் என மொத்தமாக 1476 குடியிருப்பு பணிகள் இந்த மாதம் இறுதியில் தொடங்கப்படும். அடுத்த மாதம் டிசம்பரில் மக்களுக்கு இடம் கொடுக்கப்படும்.
74 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிராட்வே பேருந்து நிலையத்தை 822 கோடி ரூபாய் மதிப்பில், பெருந்திட்டத்தை தயாரித்து மல்டி லெவல் கார் பார்க்கிங் உள்ளிட்ட வணிக வளாகங்கள் உட்பட ஒன்பது மாடி கட்டிடம் ஆகவும் பேருந்து நிலையமும் மீதம் உள்ள இடங்கள் வணிக வளாகத்திற்கும் பயன்படுத்தப்பட உள்ளது” என்றார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சூரியனார் கோவில் ஆதின மடம் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வருமா என எழுப்பட்ட கேள்விக்கு, “இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 60 மற்றும் 60Aயின்படி இதுபோன்று குற்றச்சாட்டுகள் ஏற்படுகிறபோது முழுமையான விசாரணை நடத்தி மடத்தை முழுமையாக ஏற்றுக் கொள்வது.
மற்றொரு சட்டப்பிரிவில் அவர்களை விரும்பி இந்து சமய அறநிலை துறைக்கு ஏற்றுக் கொள்வதற்கு கேட்டுக்கொண்டால் ஏற்றுக்கொள்ளப்படும். மடத்தை எடுத்துக் கொள்வதற்கான கடிதத்தை அதிகாரிகள் பெற்றுள்ளனர்.
இது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது நாளைக்குள் முடிவெடுக்கப்படும். மடத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது எங்களுக்கு தெரியாது. அது குறித்தும் ஆய்வு செய்யப்படும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க தயங்காது.
அரசு ஊழியர்களை பொருத்தவரை திமுகவின் ஒரு அங்கம் கடுமையான நிதி நெருக்கடி பல்வேறு சூழல்கள் இருந்த போதும் அவர்களின் வாழ்வாதாரத்தை பேணிக் காக்கக்கூடிய முதல்வராக ஸ்டாலின் இருந்திருக்கிறார்.
பலம் இல்லாமல் தமிழிசை பேசி வருகிறார். திமுக பலமாக அரசியல் களத்தில் இருக்கிறது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நிச்சியம் திமுக 200 தொகுதியில் வெற்றி பெறும்” என்றார்.
பாஜகவோடு கூட்டணியில் இல்லை என கூறிய எடப்பாடி ஒத்த கருந்து உடைய கட்சிகளோடு கூட்டணி வைக்கப்படும் என ஈபிஎஸ் பேசியது குறித்தான கேள்விக்கு, “அவருடைய தன்மானம் அரசியல் சூழலை பற்றி நன்றாக அறிவீர்கள். நிலையில்லாத மனிதர் அவரை பற்றி பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என தெரிவித்தார்.
What's Your Reaction?






