BREAKING | தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்! அமைச்சரவையில் அதிரடி மாற்றம்!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார்.

Sep 28, 2024 - 22:14
Sep 28, 2024 - 22:27
 0
BREAKING | தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்! அமைச்சரவையில் அதிரடி மாற்றம்!
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்!

பேரறிஞர் அண்ணாவால் 1949ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை கடந்து இந்த ஆண்டு பவள விழாவை நிறைவு செய்துள்ளது. அதன்படி திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் திமுக பவள விழா காஞ்சிபுரத்தில் இன்று (செப். 28) நடைபெற்றது. 

இந்நிலையில் நீண்ட நாட்களாகவே கூறப்பட்டிருந்தபடி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார். இதையடுத்து தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அமைச்சரவை மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  நிதி மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பால் வளத்துறை வழங்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜுக்கு மனிதவள மேம்பாட்டு துறை வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் கே. ராமச்சந்திரன் ஆகியோர் தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ள நிலையில் அவருக்கு ஒதுக்கப்படவுள்ள இலாகா குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நாளை (செப். 29) மாலை 3:30 மணிக்கு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து டாக்டர் கோவி. செழியன், எஸ்.எம். நாசர், ராஜேந்திரன் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இலாகாக்கள் பின்னர் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow