விஜய் அரசியலுக்கு வந்தது சரி; ஆனால், அதனை ஏற்க முடியாது ... நடிகர் சரத்குமார் கருத்து

திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றுதான் என விஜய் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். 

Nov 16, 2024 - 06:46
Nov 16, 2024 - 07:22
 0
விஜய் அரசியலுக்கு வந்தது சரி; ஆனால், அதனை ஏற்க முடியாது ...  நடிகர் சரத்குமார் கருத்து
விஜய் கருத்தை ஏற்க முடியாது ... நடிகர் சரத்குமார் கருத்து

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் தனியார் திருமண மண்டபத்தில் தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் பாஜக முக்கியஸ்தருமான சரத்குமார் தலைமையில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி நடைப்பெற்றது. சமத்துவ விருந்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் பேசியதாவது, 

பாஜகாவில் கட்சி பொறுப்புக்காக இணையவில்லை. பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இணைந்தேன். மேலும் பேசிய அவர், விஜய் அரசியல் வந்தது வரவேற்கத்தக்கது. அரசியலுக்கு வருவது ஜனநாயக கடமை , யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என விஜய் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மற்ற கட்சிகளை விட விஜய் எவ்வாறு மாறுபட்டு செயல்பட போகிறார் என்பது போகப்போக தான் தெரியும். விஜய் பல கூட்டங்களை நடத்தி, பத்திரிக்கையாளர்களை சந்தித்து தான் என்ன செய்யப் போகிறோம் என்பதை பற்றி விளக்க வேண்டும். அரசியல் இயக்கமாக விஜய் ஆரம்பித்த பிறகு யாரையாவது தாக்க வேண்டும் என்ற காரணத்தினாலே மத்திய மாநில அரசுகளை விஜய் தாக்கி பேசியுள்ளார். 

தமிழ்நாட்டில் பாஜக ஒருங்கிணைப்பு குழு எச். ராஜா தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது. தமிழ்நாட்டில் 2026 இல் பாஜக ஆட்சி அமைக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. அதிமுக பாஜக கூட்டணி மறுபடியும் சாத்தியமா என்பது அண்ணாமலைக்கு தான் தெரியும். பொது வாழ்க்கை, மக்கள் சேவைக்கு வந்த பிறகு கல்லடி பட தான் செய்யும். அதுதான் இப்போது விஜய்க்கும் நடந்து கொண்டிருக்கிறது. 

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை கரப்பான் பூச்சி என முதலமைச்சர் கூறுவது அரசியல் நாகரீகம் அற்றது. தமிழ்நாட்டில் திமுக அதிமுக வாக்கு சதவீதம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் பாஜக தனித்து 11 சதவீதத்துக்கு மேல் வாக்குகளை பெற்றுள்ளது. பாஜகவில் கடுமையாக உழைப்பவர்கள் உள்ளார்கள். 

தேசம் உயர வேண்டும் எனவும் தேசத்திற்காக உழைப்பவர்களும் பாஜகவில் கடுமையாக உழைத்து வருகிறார்கள். உச்ச நடிகராக இருந்த போது தான் நான் நடிப்பை விட்டு விட்டு அரசியலுக்கு வந்தேன். உழைப்பு உறுதி இருந்தால் எதுவும் சாத்தியம் என தெரிவித்தார்.

உதயநிதி துணை முதலமைச்சராக பதவியேற்ற பிறகு  என்ன செய்திருக்கிறார் என்று கூறவேண்டும் என்றால்,   கலைஞரின் பேரன், முதல்வர் ஸ்டாலின் மகனாக உதயநிதி ஸ்டாலின் வளம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்த ஆண்டு ஜூலை முதல், மாநில தலைவர் அண்ணாமலையோடு இணைந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக தமிழ்நாட்டில் வெற்றி பெற களத்தில் இறங்கப் போவதாகவும் கூறியுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow