மதுரை சிக்கன் சுக்கா.. ரொம்ப ஈஸி.. செம டேஸ்டி

அசைவ உணவுகளில் சிக்கன் ஈஸியாக சமைக்கலாம். விதம் விதமாக சுவையாக சமைக்கக்கூடிய உணவு சிக்கன். பல வெரைட்டிகள் இருந்தாலும் சிக்கன் சுக்கா சுவையாக இருக்கும். பேச்சிலர்ஸ் கூட ஈஸியாக சமைக்கலாம்.

Jul 3, 2024 - 16:59
Jul 3, 2024 - 17:03
 0
மதுரை சிக்கன் சுக்கா.. ரொம்ப ஈஸி.. செம டேஸ்டி
Madurai Chicken Chukka Recipe in Tamil
Prep Time  min
Cook Time  min
Serving
Difficulty Easy

சிக்கன் புரதச்சத்து நிறைந்தது. அவைச பிரியர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு சிக்கன். சிக்கன் வைத்து எத்தனையோ விதமான உணவுகள் சமைத்தாலும் கார சாரமான சிக்கன் சுக்கா சாம்பார் உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். எளிதாக சமைக்கக் கூடிய சிக்கன் சுக்கா செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன? எப்படி சமைப்பது என்று பார்க்கலாம்.

1/2 கிலோ சிக்கன்
பெரிய வெங்காயம் 3 இல்லாவிட்டால் சின்ன வெங்காயம் 100 கிராம்
தக்காளி - 2
வர மிளகாய் - 5
பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை - 1 கொத்து
தேவையானஅளவுகொத்தமல்லி
மிளகாய் தூள் - 1 மேஜை கரண்டி
தனியா தூள் - 1 மேஜை கரண்டி
மஞ்சள் தூள் - 1/ 2 மேஜை கரண்டி 
 மிளகுத்தூள் - 1 மேஜை கரண்டி
இஞ்சி பூண்டு விழுதுகள் - 1 மேஜை கரண்டி 
எலுமிச்சை பழம் 1
 சோம்பு சிறிதளவு
 சீரகம் சிறிதளவு
பிரிஞ்சி இலை 2
 பட்டை 1 துண்டு
கிராம்பு 4

Directions

முதலில் சிக்கன் துண்டுகளை நன்றாக சுத்தம் செய்து அலசி எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு கொள்ளவும். சோம்பு பொரிந்ததும் கறிவேப்பிலை போட்டு கலந்து அதனுடன் இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளுங்கள்.
பிறகு அவற்றுடன் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 

வெங்காயம் வர மிளகாய் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் சிக்கன் துண்டுகளை போட்டு கலந்து வதக்கவும். பிறகு அதனுடன் மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கடாயை மூடி வேக வைக்கவும். 

சிக்கன் வெந்து வறுபட்டு எண்ணெய் பிரிந்து வந்ததும்  அதன் பச்சை வாசனை போனவுடன் அதனுடன் மிளகு தூள், மல்லி தூள், மிளகாய் தூள், சீரகம் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக கலந்துவிட்டு கொள்ளவும்.பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறி மூடி வைத்து சுருள வேக விடவும். சிக்கன் நன்றாக வெந்தவுடன் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலையை தூவி கிளறி இறக்கினால் சுவையான மதுரை சிக்கன் சுக்கா ரெடி. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow