தலை சிறந்த பேட்ஸ்மேன்கள் யார்? - ரெய்னா, ஹர்பஜன் சொன்னது என்ன?

சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ராபின் உத்தப்பா, ஆரோன் பிஞ்ச் ஆகியோரிடம் வர்ணனையாளர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக யாரை கருதுகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

Jul 14, 2024 - 23:58
Jul 15, 2024 - 00:06
 0
தலை சிறந்த பேட்ஸ்மேன்கள் யார்? - ரெய்னா, ஹர்பஜன் சொன்னது என்ன?
தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் குறித்து ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா கருத்து

ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் 'உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 2024' டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 3ம் தேதி முதல் சுமார் 10 நாட்களுக்கும் மேலாக இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்றன.

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் அணியும், பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியும் நேற்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 156 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் கம்ரன் அக்மல் 19 பந்தில் 24 ரன்கள் எடுத்து நெகி பந்தில் ராயுடுவிடம் கேட்ச் ஆனார். ஒருபக்கம் ஷர்ஜீல் கான் (12 ரன்), சோஹைப் மக்சூத் (21 ரன்), கம்ரன் அக்மல் (24), யூனிஸ் கான் (7) என சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுபக்கம் ஷோயிப் மாலிக் அணியின் வீழ்ச்சியை தடுக்கப் போராடினார். இதற்கிடையில், நன்றாக விளையாடிக்கொண்டிருந்த மிஸ்பா உல் ஹக் 18 ரன்களில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். பின்னர், ஷோயப் மாலில் 3 சிக்சர்களுடன் 36 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசியில் சோஹைல் தன்வீர் 9 பந்தில் 19 ரன்கள் விளாச பாகிஸ்தான் அணி 156 ரன்கள் எடுத்தது. எட்டியது. இந்திய அணி தரப்பில் அனுரீத் சிங் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

பின்னர், களமிறங்கிய இந்தியா சாம்பியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராபின் உத்தப்பா (10 ரன்), சுரேஷ் ரெய்னா (4 ரன்) எடுத்து ஏமாற்றினார்கள். இதனால், இந்திய சாம்பியன்ஸ் அணி 38 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. மறுபக்கம் முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு அதிரடியில் வெளுத்து கட்டினார். 30 பந்தில் 5 பெளண்டரிகள் 2 சிக்கர்களுடன் 50 ரன்கள் விளாசிய அம்பத்தி ராயுடு சயீத் அஜ்மல் பந்தில் ஷர்ஜீல் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய குர்கிரீத் சிங் மன் (34), யூசுஃப் பதான் (30) ஆகியோர் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதனால், இந்திய சாம்பியன்ஸ் அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

போட்டி முடிந்த பின்னர், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ராபின் உத்தப்பா, ஆரோன் பிஞ்ச் ஆகியோரிடம் வர்ணனையாளர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக யாரை கருதுகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு மூவரும் மூன்று விதமாக பதிலளித்தனர். தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் குறித்து அவர்கள் அளித்த பதில்கள் பின்வருமாறு,

ஹர்பஜன் சிங்: ஜாக் காலின், பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர்.

சுரேஷ் ரெய்னா: விராட் கோலி, ஜோ ரூட், ரோஹித் சர்மா.

ஆரோன் பிஞ்ச்: சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா.

ராபின் உத்தப்பா: விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், சச்சின் டெண்டுல்கர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow