Hamas Leader Ismail Haniyeh Murder : ஹமாஸ் தலைவர் படுகொலை.. மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்..

Hamas Leader Ismail Haniyeh Murder News Update in Tamil : ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Jul 31, 2024 - 18:45
Jul 31, 2024 - 20:00
 0
Hamas Leader Ismail Haniyeh Murder : ஹமாஸ் தலைவர் படுகொலை.. மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்..
Hamas Leader Ismail Haniyeh Murder News Update in Tamil

Hamas Leader Ismail Haniyeh Murder News Update in Tamil : ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக இஸ்மாயில் ஹனியே நேற்றைய தினம் ஈரானுக்கு பயணம் செய்துள்ளார். அந்த நிகழ்வில் பங்கேற்ற பின்னர், தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டின் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலில் இஸ்மாயில் ஹனியே படுகொலை(Ismail Haniyeh Murder) செய்யப்பட்டதாக ஈரான் ராணுவம்(Iran) தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன், ஹமாஸ் தலைவரின் மெய்பாதுகாவலர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டமைக்கு எதிராக ஹமாஸ் பதிலடி கொடுக்கும் என அந்த அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் இதுவரை எந்தவொரு கருத்தையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கூடியது. ஹமாசின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கு இஸ்மாயில் ஹனியேவின் படுகொலைக்கு இஸ்ரேல் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு உலக நாடுகள் பலவும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளன. இது வெட்கக்கேடான கொலை எனவும், மத்திய கிழக்கில் பிராந்திய மோதலைத் தொடங்க இஸ்ரேல் முயற்சிப்பதாகவும் துருக்கி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதல் காசா போரை ஒரு பிராந்திய பரிமாணத்திற்கு பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

இஸ்மாயில் ஹனியேவின் படுகொலை(Ismail Haniyeh Murder) சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் குற்றம் என்றும் மத்திய கிழக்கு நாடுகளி இந்த கொலை மேலும் பதற்றத்தை அதிகரிக்க வழிவகுக்கும், என ரஷ்யா வெளியுறவுத் துறை துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow