Redmi Buds 5C விலை:
ரெட்மியின் இந்த புதிய இயர்பட்-களின் விலை ரூ. 1,799 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் செயலிகளிலும் ரெட்மி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ Xiaomi இணையதளத்திலும் வாங்கிக்கொள்ளலாம்.
Redmi Buds 5C அம்சங்கள்:
அளவு: 31 x 21.4 x 23.45 மிமீ (Buds); 57 x 55.95 x 26.85 மிமீ (Case)
எடை: 4.2 கிராம் (Each Bud); 38.5 கிராம் (Total with Case)
நீர் மற்றும் தூசி எதிர்ப்பு : IP54 (Buds only)
நிறம் : சிம்ஃபனி புளூ, பேஸ் வெள்ளை மற்றும் அக்கவுஸ்டிக் பிளாக்.
உங்களது கைகளுக்குள் அடக்கமாக வைத்துக்கொள்ளும்படியான காம்பேக்ட் டிசைனிலும், காதுகளில் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய அளவிலான டிசனிலும் இந்த புதிய Redmi Buds 5C இயர்பட் அமைந்துள்ளது. இது மூன்று வண்ணங்களில் கிடைப்பதால் உங்களுக்கு விருப்பமான நிறத்தை தேர்வு செய்ய ஆப்ஷன்கள் இருக்கிறது. சார்ஜ் செய்யும்போதும் புளூடூத் கனெக்டிவிட்டியை தெரிந்துகொள்வதற்காகவும் சிறிய LED லைட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. USB Type-C port கொண்டு எளிதாக இந்த இயர்பட்-களை சார்ஜ் செய்துகொள்ளலாம்.
இந்த இயர்பட்-களில் டச் வசதி கொடுக்கப்பட்டுள்ளதால், பிளே, பாஸ், நெக்ஸ்ட் உள்ளிட்டவைக்கு சுலமாக ஒரு முறை டச் செய்தாலே போதுமானது. இதே போல் volume control-உம் டச் மூலமே செய்துகொள்ளலாம்.
மேலும் படிக்க: உலக தற்கொலை விழிப்புணர்வு தினம்.. தற்கொலையை தூண்டும் கிரகங்கள்.. பரிகாரம் என்ன?
Redmi Buds 5C இயர்பட், 40db noise cancellation மற்றும் 12.4 மிமீ driver உடன் வருகிறது. பேட்டரி - 45 mAh (Bud), 480 mAh (Case), சார்ஜின் - Wired (USB Type-C), புளுடூத் - 5.3 உள்ளிட்டவை இதன் கூடுதல் சிறப்புகளாகும். ஹெவியான பேஸ் சவுண்ட் உள்ள இதில், ஆடியோ கிளாரிட்டி மிக சிறப்பாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.