கனமழையை எதிர்கொள்ள அரசு தயார் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
கனமழையை எதிர்கொள்ள அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு அறையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளர் ராஜேஷ் லக்கானி, வருவாய் நிர்வாக ஆணையர் அமுதா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. கடற்கரை மாவட்டங்களில் இதனால் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. துணை முதல்வர் நேரடியாக பார்வையிட்டு வருகிறார்.
புயலாக மாறக்கூடிய வாய்ப்பும் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளெ எடுக்கப்பட்டு வருகிறது. நாகபட்டினம், திருவாருர், தஞ்சாவூர், கடலூர் ஆட்சியர்களிடம் காணொளி வாயிலாக பேசி என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் பேசி அறிவுரை வழங்கி உள்ளார்.
விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் உயரதிகாரிகள் ஆய்வு நடத்தி அதற்குரிய நஷ்ட ஈடு வழங்கப்படும். நீர் நிலைகளை தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மழையின் அளவிற்கு ஏற்றாற்போல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பால், தண்ணீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அளவுக்கு மீறி நிரம்பினால் அருகிலுள்ள மக்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள்.
பாதியளவு நீர் தான் அதை சேமிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். பொதுமக்கள் தொடர்பு கொண்டு உதவி கேட்டால் அதற்கேற்றாற் போல உதவிகளை தகுந்த படி செய்வோம் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?