காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கனமழை காரணமாக தமிழகம் கடலூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நாளை கனமழைக்கான எச்சரிக்கை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு வட மேற்கு திசையில் நகர தொடங்கி, நேற்று முன்தினம் தீவிர தாழ்வுநிலையாக மாறியது. நேற்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. தற்போதைய நிலவரப்படி, இன்று காலை 8.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், இலக்கை – திரிகோணமலையில் இருந்து தென்கிழக்கே சுமார் 310 கி.மு தொலைவிலும், நாகப்பட்டினத்தில் தெற்கு – தென்கிழக்கே 590 கி.மீ தொலைவிலும், புதுவையில் இருந்து தெற்கு - தென்கிழக்கே 710 கி.மீமு தொலைவிலும், சென்னையில் தென் கிழக்கே 800 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை புயலாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு தான் ’ஃபெங்கல்’ என்ற பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஃபெங்கல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என தெரிவித்துள்ளது.
குறிப்பாக, டெல்டா மாவட்டங்களிலும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் இன்று முதல் 29ஆம் தேதி வரை மிக பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நாளை மிக மிக பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 20 செ.மீ மேலும் மழை கொட்டும்.