ஒரு காபியால் வந்த சோதனை.. வாடிக்கையாளர் பதிவால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்

பெங்களூருவில் உள்ள காபி கடையில் தான் பரிந்துரைத்த Cappuccino-வை ஊழியர்கள் தர மறுத்ததாக வாடிக்கையாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Nov 26, 2024 - 04:47
Nov 27, 2024 - 01:50
 0
ஒரு காபியால் வந்த சோதனை.. வாடிக்கையாளர் பதிவால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்
பிரபல காபி கடை மீது வாடிக்கையாளர்

டெல்லியைச் சேர்ந்த மனோஜ் அரோரா என்பவர் தனது மகளின் தேர்விற்காக பெங்களூருவில் உள்ள குர்கான் (Gurgaon) நகருக்கு சென்றுள்ளார். தேர்வு மையத்தில் மகளை இறக்கிவிட்டு விட்டு அருகில் இருந்த கஃபே காபி டே [Cafe Coffee Day] என்ற உணவகத்திற்கு சென்றுள்ளார். உள்ளே சென்றதும் துர்நாற்றம் வீசிய நிலையில் அதனை பொருட்படுத்தாது சிறிய Cappuccino ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அங்குள்ள ஊழியர்கள் அதனை கொடுக்க மறுத்துள்ளனர்.

ஏன் என்று கேட்டபோது தண்ணீர் இல்லாததால் பீங்கான் டம்ளர்கள் கழுவாமல் இருப்பதாகவும் அதனால் பெரிய அளவிலான பயன்படுத்தியதும் தூக்கி வீசக் கூடிய (large take away) கப்புகளில் மட்டுமே Cappuccino தரப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

சூழ்நிலையை புரிந்து கொண்ட மனோஜ் அரோரா,  Americano தர முடியுமா என்று ஊழியர்களிடம் கேட்டுள்ளார். தண்ணீர் பற்றாக்குறையால் ஊழியர்கள் அதையும் கொடுக்க மறுத்துள்ளனர். தொடர்ந்து, பெரிய அளவிலான கப்புகளில் நான் கேட்ட Small அல்லது Medium Cappuccino-வை தரமுடியுமா என்று கேட்டுள்ளார். அதையும் ஊழியர்கள் தர மறுத்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த மனோஜ் அரோரா வேறு வழியில்லாமல் 100 ரூபாய் அதிகமாக கொடுத்து பெரிய அளவிலான பயன்படுத்தியதும் தூக்கி வீசக் கூடிய (large take away) கப்புகளில் Cappuccino வாங்கி சென்றுள்ளார். இந்நிலையில், தான் வாங்கிச் சென்ற Cappuccino-வையும் அதற்கான பில்லையும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட மனோஜ் அரோரா, இதுதான் கஃபே காபி டே [Cafe Coffee Day] கடையின் தற்போதைய நிலை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், பெங்களூருவில் இயங்கிவரும் கஃபே காபி டே கடையில், காபி மற்றும் உணவுகள் தரமானதாக இல்லை என்றும் அங்குள்ள ஊழியர்களும் சரிவர பணி செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, கருத்து பதிவிட்ட மற்றொரு நபர், இது தொழில் யுக்தி என்றும் டெல்லியின் பல இடங்களில் இவ்வாறு தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதுமாதிரியான சம்பவங்கள் பண லாபத்திற்காக நடத்தப்படுகிறது என்றும் இது குறிப்பிட்ட நிறுவனத்திற்கு தெரியாமல் கூட நடைபெறலாம் என்றும் தெரிவித்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow