பார்டர் கவாஸ்கர் டிராபி: SENA நாடுகளில் புதிய சாதனை படைத்த இந்தியா..!
பெர்த் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில், SENA நாடுகளில் புதிய சாதனை படைத்துள்ளது.
பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 51.2 ஓவருக்கு 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியின் முதல் நாள் ஆட்ட முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை எடுத்த நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த நிலையில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
முதல் இன்னிங்ஸ் முடிவில் 46 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி 6 விக்கெட் இழப்பிற்கு 487 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. 2வது இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 161 ரன்களும், கே.எல்.ராகுல் 77 ரன்களை குவித்தனர். அடுத்து தேவ்தத் படிக்கல் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய கோலி, 100 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட், மற்றும் துரவ் ஜூரல் இருவரும் 1 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், நிதிஷ் குமார் ரெட்டி38 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில், இந்திய அணி டிக்ளேர் செய்தது.
534 ரன்கள் எனும் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று 238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நதன், சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியில் கேப்டன் பும்ரா 3 விக்கெட்களையும், சிராஜ் மூன்று விக்கெட்களையும் வீழ்த்தினர். வாஷிங்டன் சுந்தர் 2, ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதன் மூலம், இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
பார்டர் கவாஸ்கர் டிராபியில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. பெர்த் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியானது ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல, SENA எனப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் களங்களில் பெற்ற மிகப்பெரிய வெற்றி ஆகும்.
What's Your Reaction?