Work From Home வேலையால் வந்த பிரச்சனை.. கதறும் பெண்

Work From Home வேலை தருவதாக கூறி பெண் ஒருவரிடம் மர்ம நபர்கள் சுமார் 15 லட்சத்திற்கு மேல் மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mar 26, 2025 - 12:50
Mar 26, 2025 - 13:28
 0
Work From Home வேலையால் வந்த பிரச்சனை.. கதறும் பெண்
Work From Home வேலையால் பணத்தை இழந்த பெண் கதறல்

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவரை கடந்த ஆண்டு மர்ம நபர்கள் சிலர் தொடர்பு கொண்டு Work From Home வேலை குறித்து பேசியுள்ளனர். பின்னர் டெலிகிராம் (Telegram) சமூக வலைதளத்தை பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்கியதுடன் ஆன்லைன் மூலம் முடிக்கும் சில பணிகளையும் அப்பெண்ணிற்கு வழங்கியுள்ளனர்.

இந்த பணிக்காக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கவர்ச்சிகரமான ஊதியங்களும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தான் செய்த பணிகளுக்காக எந்த ஊதியமும் வழங்கப்படவில்லை. தொடர்ந்து, அவரது  வங்கி கணக்கில் இருந்து அந்த மர்ம நபர்கள் பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் சுமார் 15 லட்சத்திற்கு மேல் பணத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் புகார்

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நிலையில் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தில் ஐந்து பேர் ஈடுபட்டிருக்கலாம் என்றும் அதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் மன்பாடா (Manpada) காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர் மோசடி

கொரோனா காலக்கட்டத்தில் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் தொழிலாளர்கள் பலரையும் வீட்டில் இருந்து வேலை (Work From Home) செய்யுமாறு நிறுவனங்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து, கொரோனா காலக்கட்டம் முடிந்த நிலையிலும் பெரும்பாலான தொழிலாளர்கள் Work From Home வேலையை செய்து வருகின்றனர்.

இது அவர்களுக்கு மிகவும் எளிமையாக இருப்பதால் அதனையை தேர்ந்தெடுக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், வீட்டு இல்லத்தரசிகளும் Work From Home வேலை செய்தால் தாமும் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் வேலை தேடி வருகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தும் மர்ம நபர்கள் சிலர் வேலை தருவதாக கூறி பெண்களை ஏமாற்றி வருகின்றனர்.

இந்த ஆன்லைன் மோசடி குறித்து அரசு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினாலும் தொடர்ந்து இதுபோன்ற மோசடிகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow