விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்.. தண்டனைகளை கடுமையாக்க அமைச்சகம் திட்டம்!
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் குற்றச் செயல்களை தடுக்க சிவில் ஏவியேஷன் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர திட்டமிடுவதாக தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு.
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் குற்றச் செயல்களை தடுக்க சிவில் ஏவியேஷன் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர திட்டமிடுவதாக தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு.
சமீபகாலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 100 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக இந்தியன் ஏலைன்ஸ் தெரிவித்துள்ளது.
விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் குற்றவாலிகளை தடை பட்டியலில் சேர்க்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்ய உள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்திருந்தார்.
இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய நாயுடு விமான பாதுகாப்பு விதிகளிலும், சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகளை ஒழிக்க சட்டத்தில் திருத்தல் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.
”அமைச்சகத்தின் சார்பாக சில சட்ட நடவடிக்கைகளை நாங்கள் வகுத்துள்ளோம். முதலாவதாக, விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு விமானங்களில் பயணிக்க தடை விதிக்கலாம்.
இரண்டாவது...சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகளை ஒழிக்கும்படியான நடவடிக்கை” என தெரிவித்திருந்தார் நாயுடு.
மேலும் படிக்க: தங்கலான் ஓடிடி ரிலீஸுக்கு தடை கிடையாது... உயர்நீதிமன்றம் அதிரடி!
மேலும், “விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் செயலை மிக சீரியஸ்-சான குற்றமாக சேர்க்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இக்குற்றத்தை செய்பவர்களுக்கு தண்டனையும், அபராதமும் விதிக்க திட்டமிட்டுள்ளோம்.” என அவர் தெரிவித்திருந்தார்.
What's Your Reaction?