கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு... நாதக முன்னாள் நிர்வாகி கைது
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த அரசுப் பள்ளி என்சிசி பயிற்சியாளர் கோபு மற்றும் நாம்தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கருணாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி என்சிசி முகாமில், மாணவிகள் தொல்லைக்கு உள்ளான விவகாரத்தில், போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன், பள்ளி தாளாளர், முதல்வர் உள்பட மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கைது நடவடிக்கைக்கு முன் விஷம் அருந்திய சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் மேலும் ஒரு நடவடிக்கையாக காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் பள்ளியின் என்.சி.சி. மாஸ்டர் கோபு கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவராமனுக்கு போலி என்சிசி முகாம் நடத்த அனுமதி அளித்தது, அதற்காக சான்றிதழ் அனைத்தையும் தயார் செய்து கொடுத்தது, பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை தெரிந்தும் அதை மறைத்தது ஆகிய குற்றங்களின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் கோபுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இதே போல, சிவராமனுக்கு உடந்தையாக இருந்ததாக, நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கருணாகரனும் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் பர்கூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவராவார். கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் தற்போது வரை 16 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்
What's Your Reaction?