Fake NCC Camp : கிருஷ்ணகிரி போலி NCC முகாம்.. “ஜாமின் கொடுக்காதீங்க..” - நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பு வாதம்
Fake NCC Camp Issue in Krishnagiri : கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் ஜாமின்கோரி மனு தாக்கல் செய்தனர். முக்கிய குற்றவாளியான சிவராமனுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் தொடர்பு இருப்பதால் ஜாமின் வழங்கக்கூடாது என காவல்த்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.