கவர்னர் தேநீர் விருந்து.. கலைஞர் நினைவு நாணயம் வெளியீடு.. தொடர்புபடுத்திய இ.பி.எஸ்.

கலைஞர் 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழாவில், பாஜக பங்கேற்கும் என அண்ணாமலை உறுதிப்படுத்திய காரணத்தால், கவர்னரின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Aug 19, 2024 - 02:21
Aug 19, 2024 - 02:28
 0
கவர்னர் தேநீர் விருந்து.. கலைஞர் நினைவு நாணயம் வெளியீடு.. தொடர்புபடுத்திய இ.பி.எஸ்.

இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், கலைஞர் நிணைவு நாணயத்தை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நினைவு நாணயத்தை வெளியிட, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவினை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழாவையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்து இருந்தார்ள்ளார். ஆனால் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்து இருந்தன. ஆனால், தனது நிலைப்பாட்டை அறிவிக்காமலே இருந்த திமுக, இறுதியில் தேநீர் விருந்தில் பங்கேற்றது.

இந்நிலையில், இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட அனைத்து மேம்பால பணிகளும் அதிமுக ஆட்சியில் மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டது. அத்திக்கடவு அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம் அதிமுக ஆட்சியில் 90 சதவீதம் நிறைவுபெற்றது.

அதனை ஆமை வேகத்தில் கொண்டு சென்ற திமுக அரசு, தற்போது தான் அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள், 54 கோடி ரூபாய் செலவில் பாதி முடிந்த நிலையில், திமுக அரசு அதனை கிடப்பில் போட்டுள்ளது. இதே போன்று கோவை மேற்கு புறவழிச் சாலை பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி கொடுக்கும் தேநீர் விருந்தில் திமுக பங்கேற்காது என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். கலைஞர் நூற்றாண்டு விழா நாணய வெளியிட்டு விழாவில், பாஜக பங்கேற்க வேண்டுமென்றால், ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்து முதல்வர் பங்கேற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த நிர்ப்பந்தமே முதல்வர் தேநீர் விருந்தில் பங்கேற்றதற்கான காரணம்.

இதன் மூலம் திமுகவின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது. தமிழ்.. தமிழ்.. என்று முரசு கொட்டும் திமுக, 100 ரூபாய் நாணயத்தில் ஹிந்தி மொழி பொறித்ததற்க்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை” என கேள்வி எழுப்பினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow