ஆற்றில் குதித்து உயிரிழந்த இளைஞர்.. போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை
வாகன சோதனையின் போது, காவல்துறை மிரட்டிய நிலையில் அடையாறு ஆற்றில் குதித்த இளைஞரை காப்பாற்றாத அடையார் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
![ஆற்றில் குதித்து உயிரிழந்த இளைஞர்.. போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை](https://kumudamnews.com/uploads/images/202501/image_870x_679b45620564d.jpg)
சென்னை அடையாறு திருவிக பாலம் அருகே கடந்த 2018- ம் ஆண்டு போக்குவரத்து உதவி ஆய்வாளர் விஜயரங்கன் உள்ளிட்ட காவல் துறையினர் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சென்னை ராஜா அண்ணாமலை புரத்தைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன், சுரேஷ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளனர்.
மேலும் படிக்க: நேரில் ஆஜராக தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
இதை பார்த்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் விஜயரங்கன் இருவரையும் பிடித்து விசாரித்துள்ளார். மேலும், இருவரும் மது போதையில் இருந்ததாக கூறி இரு சக்கர வாகனத்தின் சாவியை பறித்துள்ளார். இதனால் மனமுடைந்த இராதாகிருஷ்ணன், அடையாறு ஆற்றில் குதித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சுரேஷ் தன் நண்பன் இராதாகிருஷ்ணனை காப்பாற்றும்படி உதவி ஆய்வாளர் விஜயராகவனிடம் பலமுறை முறையீட்டுள்ளார்.
ஆனால் உயிருக்கு போராடிய ராதாகிருஷ்ணனை காப்பாற்றாமல், அவன் விதி முடிஞ்சது என உதவி ஆய்வாளர் விஜயராகவன் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்குப் பின் அடையாறு ஆற்றில் குதித்து உயிரிழந்த இராதாகிருஷ்ணன் உடல் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயிரிழந்த ராதாகிருஷ்ணின் தாயார் ரேவதி, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
மேலும் படிக்க: பொது இடங்களில் குப்பை போடுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை .. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு..!
இந்த புகார் மனுவை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், குடித்து விட்டு வாகனத்தை ஓட்டியதற்கான ஆவணங்களை காவல்துறை தாக்கல் செய்யவில்லை என்றும் ஆற்றில் குதித்து உயிருக்கு போராடிய நபரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காதது மனித உரிமை மீறல் எனக்கூறி, அடையாறு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் விஜயரங்கன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், மகனை இழந்த ரேவதிக்கு மீன்று லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)