விஜய்யை வெறுப்பேற்றத்தான் அஜித்துக்கு வாழ்த்தா? துனை முதல்வருக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி!

"விஜய்க்கு கோபம் வருவதற்க்காகத்தான் அஜித்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து கூறினாரா? என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Oct 30, 2024 - 22:32
Oct 30, 2024 - 22:35
 0
விஜய்யை வெறுப்பேற்றத்தான் அஜித்துக்கு வாழ்த்தா? துனை முதல்வருக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி!
விஜய்யை வெறுப்பேற்றத்தான் அஜித்துக்கு வாழ்த்தா? துனை முதல்வருக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு முன்னாள் ஆளுநர் தம்பிக்கு சௌந்தரராஜன் பாஜக துணை தலைவர் கரு நாகராஜன் ஆகியோர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், “அனைத்து மக்களும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும்  தீபாவளியை கொண்டாட வேண்டும். அனைவர்க்கும் தீபாவளி வாழ்த்துக்கள். ஆன்மீகமும் தேசியமும் எனது இரண்டு கண்கள் என கொண்டு செயல்பட்டவர் தேவர்திருமகனார். ஆன்மீகமும் அரசியலும் கலக்க முடியாது என்ற கொள்கையை திமுகவினர் வைத்துள்ளனர் ஆன்மிகத்தையும் அரசியலையும் சரியான பாதையில் கொண்டு சென்றதால் தான் தேவர் திருமகனாருக்கு வெற்றி கிடைத்தது. எனவே மதுரையில் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்திய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கும் முதலமைச்சர் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும்.

மெட்ரோ ரயிலை ஆரம்பித்த பிறகு மத்திய அரசு தலையிட்ட பின்னர் தான் நிறைவடைய முடிகிறது. பாஜக பலம் பெற்றால் மட்டுமே இங்குள்ள மக்களுக்கான திட்டங்கள் சரியாக நிறைவேற்ற முடியும். உதயநிதி அஜித்துக்கு வாழ்த்து கூறுகிறார். விஜய்க்கு கோபம் வருவதற்கு அஜித்துக்கு வாழ்த்து கூறுகிறாரா என தெரியவில்லை. உலக அரங்கில் விளையாட்டை முன்னிறுத்த அஜித்துக்கு வாழ்த்து கூறிவிட்டு சாமானிய மக்கள் விளையாடும்  மாநகராட்சி விளையாட்டு திடல்களுக்கு 10 பேர் பயிற்சி பெற்றால் ஒரு மணி நேரத்திற்கு 1200 ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும் என்ற மிகக் கொடுமையான தீர்மானத்தை மாநகராட்சி நிறைவேற்றி இருக்கிறது. சாமானிய மக்கள் பயன்படுத்தும் விளையாட்டு திடலுக்கு கட்டணம் விடுத்திருப்பதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.

போதை பொருளை தடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் மாதவரத்தில்  27 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பிடிபட்டிருக்கிறது. போதைப் பழக்கத்தில் சிக்கியிருக்கும் குழந்தைகளை வெளியில் கொண்டு வர விளையாட்டு தேவை. விளையாட்டை பிரதமர் ஊக்கப்படுத்தி வரக்கூடிய நிலையில் விளையாட்டை நசுக்கும் அளவிற்கு மாநகராட்சி பூங்காக்களில் விளையாடுபவர்களுக்கு கட்டணம் வசூலிப்பதை உடனே திரும்ப பெற வேண்டும். அம்மா அரங்கம், சர்பட்டி தியாகராய அரங்கம் நஷ்டத்தில் ஓடுகிறது என இந்த இரண்டு அரங்கங்களையும் தனியாருக்கு விடுவதை உடனே திரும்ப பெற வேண்டும். மேலும் ஏழை மக்களின் திருமண விழாக்கள் நிகழ்ச்சிகளை நடத்தி பயன்பெறும் வகையில் அங்கு வசதிகளை மேம்படுத்த வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow